டூவிலர் டயர் தயாரிப்பில்முன்னணி இடத்தில் உள்ள மேக்சிஸ் இந்தியா நிறுவனம், ஹரியானாவின் கெய்தாலில் பகுதியில் விநியோகஸ்தர்கள் சந்திப்பை நடத்தியது. இந்த சந்திப்பில் 35 டீலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், மேக்சிஸ் நிறுவன டயர்களின் டிசைன்கள் குறித்து, இந்தியாவில் இந்த டயர்களுக்கு அளிக்கப்படும் வாரண்டின் கொள்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த விழாவில் பேசிய மேக்சிஸ் இந்தியா நிறுவன்ம உயர் அதிகாரி பிங்-லின் வு பேசுகையில், இந்திய டயர் தொழிற்சாலைகளில் மேக்சிஸ் நிறுவனம் பெற்று வரும் வளர்ச்சி தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமே 770 டீலர்கள் ஏற்கவே உள்ள நிலையில், இதை அதிகரிக்கக் முயற்சி செய்து வருகிறோம். வரும் 2023-க்குள் 15 சதவிகித இந்தியா டூவிலர் மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதே தங்கள் நிறுவனத்தின் நோக்கமாகும். தற்போது வட இந்தியாவில் மட்டும 262 டீலர்களுடன், ஹரியானாவில் மட்டுமே 36 டீலர்கலை கொண்டுள்ளது என்றார்