கடந்த மார்ச் 2016யில் விற்பனைக்கு வந்த மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 2 லட்சம் முன்பதிவுகளை அள்ளி புதிய சாதனையை பெற்றுள்ளது. பிரெஸ்ஸா சராசரியாக மாதம் 9000 கார்கள் வரை டெலிவரி கொடுக்கப்படுகின்றது.
காம்பேக்ட் ரக எஸ்யூவி சந்தையில் உள்ள ஈக்கோஸ்போர்ட் மற்றும் டியூவி300 போன்ற மாடல்களுக்கு நேரடியாகவும் க்ரெட்டா , டஸ்ட்டர் , டெரோனோ போன்ற எஸ்யூவிகளின் தொடக்க நிலை வேரியன்ட்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான விலையில் வந்த விட்டாரா இந்திய எஸ்யூவி ஆர்வலர்கள் மத்தியில் மாருதியின் வலுவான விற்பனை மற்றும் சேவை மையங்களின் ஆதரவாலும் மிக விரைவாகவே யுட்டிலிட்டி ரக சந்தையில் ஆதிக்கத்தை தொடங்கியது.
விட்டாரா பிரெஸ்ஸா
விட்டாரா காரில் வழக்கம் போல மாருதியின் ஆஸ்தான எஞ்சின் இன்ஜின் 1.3 லிட்டர் மல்டிஜெட் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 89 bhp மற்றும் இழுவைதிறன் 200 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மைலேஜ் லிட்டருக்கு 24.3 கிமீ ஆகும்.
இருவண்ண கலவை , மாருதி ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் ஆப்பிள் கார்பிளே , ஆண்ட்ராய்டு ஆட்டோ தொடர்புகள் , ஸ்டைலிசான அமைப்பு போன்றவற்றுடன் சவலான விலையே பிரெஸ்ஸா மாடலுக்கு பக்கபலமாக அமையவே விட்டாரா மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விலை பட்டியல்
பிரெஸ்ஸா எஸ்யூவி விலை பட்டியல் சென்னை எக்ஸ்ஷோரூம் , தமிழ்நாடு
வேரியன்ட் விபரம் | சென்னை விலை (ரூபாய்) |
Ldi | 743194 |
Ldi (O) | 756425 |
Vdi | 812706 |
Vdi(O) | 825937 |
Zdi | 891067 |
Zdi+ | 991827 |
Zdi+ Dual Tone | 1014218 |