இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி தனது கார்களில் உள்ள ஆல்டோ கே 10 முதல் இன்விக்டோ வரை பல்வேறு மாடல்களின் விலையை ரூ.6,000 முதல் அதிகபட்சமாக ரூ.32,500 வரை உயர்த்துவதாக பிஎஸ்இ மூலம் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் காரணமாக, பிப்ரவரி 2025 முதல் கார் விலைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. செலவுகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவும் இந்நிறுவனம் உறுதிபூண்டிருந்தாலும், அதிகரித்த செலவுகளில் சிலவற்றை தவிர்க்க இயலாத கட்டாயத்தில் உள்ளோம். கார்களின் வாரியான விலை உயர்வு பின்வருமாறு.
குறைந்தபட்ச விலை உயர்வை புதிய ஸ்விஃப்ட் மாடலும் அதிகபட்சமாக செலிரியோ ரூ.32,500 வரையும் உயர்த்தப்பட உள்ளது.
Model | Hike Amount |
---|---|
Maruti Alto K10 | Up to Rs 19,500 |
Maruti S-Presso | Up to Rs 5,000 |
Maruti Celerio | Up to Rs 32,500 |
Maruti Wagon R | Up To Rs 15,000 |
Maruti Swift | Up to Rs 5,000 |
Maruti Dzire | Up to Rs 10,000 |
Maruti Brezza | Up to Rs 20,000 |
Maruti Ertiga | Up to Rs 15,000 |
Maruti Eeco | Up to Rs 12,000 |
Maruti Ignis | Up to Rs 6,000 |
Maruti Baleno | Up to Rs 9,000 |
Maruti Ciaz | Up to Rs 1,500 |
Maruti XL6 | Up to Rs 10,000 |
Maruti Fronx | Up to Rs 5,500 |
Maruti Invicto | Up to Rs 30,000 |
Maruti Jimny | Up to Rs 1,500 |
Maruti Grand Vitara | Up to Rs 25,000 |