2019 ரெனோ க்விட் காரின் 1.0 லிட்டர் மாடல் மற்றும் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ என இரு மாடல்களும் பல்வேறு வசதிகள் மற்றும் குறைவான விலை கொண்டிருந்தாலும், ரெனோ க்விட் Vs மாருதி எஸ் பிரெஸ்ஸோ என எந்த கார் சிறந்த மாடல் என ஒப்பீட்டு அறிந்து கொள்ளலாம். மேலும் டட்சன் ரெடி-கோ காரும் இந்த இரு மாடல்களுக்கும் போட்டியை ஏற்படுத்துகின்றது.
மூன்று கார்களும் வித்தியாசமான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாகும். குறிப்பாக எஸ் பிரெஸ்ஸோ கார் ஆனது மற்ற இரு கார்களை விட சற்று கூடுதலான உயரம் பெற்று மினி எஸ்யூவி போன்றே காட்சியளிக்கின்றது. இதன் காரணமாக சற்று உயரமான மாடலை போல காட்சியளிக்கின்றது. அதேவளை வீல்பேஸ் பொருத்தவரை அதிகபட்மாக க்விட் கார் கொண்டிருக்கின்ற காரணத்தால் கூடுதலான இடவசதியை வழங்குகின்றது.
முன்புற தோற்ற அமைப்பில் எஸ் பிரெஸ்ஸோ மற்றும் ரெடி-கோ மாடல்களை விட க்விட் சற்று கூடுதலான ஸ்டைலிங் அம்சங்களுடன் எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்றிருக்கின்றது. இது மற்ற இரு கார்களை விட சற்று கூடுதலான கவர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
மூன்று கார்களிலும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டு ஆப்ஷனிலும் கிடைக்க தொடங்கியுள்ளது. கூடுதலாக குறைவான விலை கொண்ட மாடல்களில் ரெடி-கோ மற்றும் க்விட்டில் 0.8 லிட்டர் என்ஜினும் வழங்கப்படுகின்றது.
மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையானதாக உள்ளது. மற்ற இருமாடல்களும் பிஎஸ் 4 என்ஜினை பெற்றதாகும்.
விவரக்குறிப்புகள் | மாருதி எஸ் பிரெஸ்ஸோ | ரெனோ க்விட் | டட்சன் ரெடி-கோ |
---|---|---|---|
Engine | 1.0 லிட்டர் | 1.0 லிட்டர் | 1.0 லிட்டர் |
Displacement | 999 cc | 999 cc | 999 cc |
Max Power | 67 bhp at 5500 rpm | 67 bhp at 5500 | 67 bhp at 5500 |
Max Torque | 90 Nm at 3500 rpm | 91 Nm at 4250 rpm | 91 Nm at 4250 rpm |
Transmission | 5 MT / 5 AMT | 5 MT / 5 AMT | 5 MT / 5 AMT |
மைலேஜ் | 21.7 Kmpl | 21 Kmpl | 21 Kmpl |
இன்டிரியர் அமைப்பின் வசதிகளை பொருத்தவரை எஸ் பிரெஸ்ஸோவின் மாறுபட்ட சென்டரல் கன்சோல் ஸ்டைலிங் கவருகின்றது. இதற்கு இணையாகவே க்விட் கிளைம்பர் விளங்குகின்றது. 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் க்விடில் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, நேவிகேசன் வசதிகளை பெற்றுள்ளது. எஸ் பிரெஸ்ஸோ மாடலின் டாப் வேரியண்டுகளில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு நேவிகேஷன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. ரெடி-கோ காரில் 2 டின் ஆடியோ சிஸ்டம் மட்டும் இணைக்கபட்டுள்ளது.
அடிப்படையான பாதுகாப்பு வசதிகள் ஏர்பேக், இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், கீலெஸ் என்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளது. மற்ற இரு மாடல்களை விட கூடுதலாக ரியர் பார்க்கிங் கேமராவை க்விட் கார் பெற்று அசத்தியுள்ளது.
விலை ஒப்பீடு
ரெனோ க்விட் மாடலின் 1.0 லிட்டர் என்ஜின் ஆரம்ப விலை சற்று அதிகமாக தொடங்கினால் கூட டாப் வேரியண்ட் எஸ் பிரெஸ்ஸோ மாடலை விட சற்று குறைவாகவும் அதேநேரம் கூடுதலான வசதிகளை பெற்று க்விட் கார் முன்னிலை வகிக்கின்றது. க்விட் கிளைம்பர் வேரியண்டில் இடம்பெற்றுள்ள ஒரு சில வசதிகள் எஸ் பிரெஸ்ஸோ மாடலில் இல்லை.
மாடல் | விலை (ex-showroom, Delhi) |
---|---|
1.0 லிட்டர் என்ஜின் | |
ரெனோ க்விட் | ₹ 4.33 முதல் ₹ 4.84 லட்சம் |
டட்சன் ரெடி-கோ | ₹ 3.90 முதல் ₹ 4.37 லட்சம் |
மாருதி எஸ் பிரெஸ்ஸோ | ₹ 3.69 முதல் ₹ 4.91 லட்சம் |