கடந்த 13ந் தேதி விற்பனைக்கு வந்த மாருதி சுசுகி இக்னிஸ் காருக்கு ஏற்ற ஆக்சசெரீஸ்களை நெக்ஸா அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு விதமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் இக்னிஸ் காருக்கு தேர்ந்தெடுக்கலாம்.
மேற்கூரை டிசைன் , தோற்ற அமைப்பு , ஸ்பாய்லர் , கதவு கைப்படி கவர்கள் , கருப்பு வண்ண அலாய்வீல் , பாடி சைட் மோல்டிங் போன்றவற்றுடன் இன்டிரியரில் பல்வேறு வண்ணங்களை இருக்கை கவர்கள் , அம்பியன்ட்லைட் , பின்புற இருக்கைகளுக்கு பொழுதுபோக்கு அமைப்பு , 270 வாட்ஸ் கென்மல்டிமீடியா சிஸ்டம், 140 வாட் சப்வூஃபர் மற்றும் ஹெர்ட்ஸ் 2 சேனல் ஆம்பிளிஃபையர் போன்ற பல்வேறு கஸ்டமைஸ் வசதிகளை இக்னிஸ் கார் பெற்றுள்ளது.
சுசுகி இக்னிஸ் என்ஜின் விபரம்
இந்திய இக்னிஸ் மாடலில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 75 ஹெச்பி பவருடன் , 190 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 83 ஹெச்பி பவருடன் , 113 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க – இக்னிஸ் காரின் விலை விபரங்கள் அறிய
மேலும் முழுமையான சுசுகி இக்னிஸ் துனைகருவிகள் விபரங்கள் அனைத்தும் பிரவுச்சர் படங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. படங்களை பெரிதாக காண படத்தில் க்ளிக் பன்னுங்க..
[foogallery id=”15569″]