Categories: Auto News

மஹிந்திராவின் BE 6e இனி BE 6 என்றே அழைக்கப்படும்..! ஆனால் ?

mahindra be 6e suv front

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் ஒன்றான  BE 6e என்ற மாடலின் பெயரை தற்பொழுது BE 6 என மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக சமீபத்தில் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் இண்டிகோ ஏர்லைன்ஸ் தொடர்ந்து வழக்கின் காரணமாக புதிய பெயரானது மாற்றப்பட்டுள்ளது.

மஹிந்திரா தனது மின்சார வாகனங்களுக்கான SUV போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக “BE 6e” க்கு 12th Class (வாகனங்கள்) கீழ் வர்த்தக முத்திரையை பதிவு செய்துள்ளது. “BE” என குறிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 12 ஆம் வகுப்பில் மஹிந்திராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இது BE 6e இன் கீழ் இருக்கும் எங்கள் “Born Electric” பிராண்டின் கீழ் வெளியிட்டுள்ளது.

இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் 6E என்ற பெயரைப் பயன்படுத்தி வரும் நிலையில் மஹிந்திரா மீது வழக்கு தொடர்ந்துள்ளது. மஹிந்திராவின் “BE 6e” என்பது தனித்த “6E” அல்ல என தொடர்ந்து நீதி மன்றத்தில் போராடுவோம். மேலும், இரண்டும் ஒரே வர்த்தக பிரிவில் இல்லை என்பதனால் வழக்கு மஹிந்திராவுக்கு சாதகமாக அமையும் என கூறப்படுகின்றது.

எற்கனவே, எங்களுக்கு முன்னுதாரனமாக டாடா மோட்டார்சின் இன்டிகோ கார் உள்ளதால் தொடர்ந்து இந்த வழக்கினை எதிர்கொள்ளுவோம் என  குறிப்பிடப்பட்டுள்ளது.

இண்டிகோ 9th Class கீழ் (மின்னணு விளம்பர காட்சி), 35 (போக்குவரத்து மற்றும் விநியோக சேவைகள் தொடர்பான விளம்பர சேவைகள்) மற்றும் 39 (பயணிகள் மற்றும் பொருட்களின் போக்குவரத்துக்கான விமான சேவைகள்) முழுவதும் ‘6E Link’ பெயரை வர்த்தக முத்திரை செய்துள்ளது.

பிப்ரவரி 2025ல் XEV 9e, BE 6e மாடலை விற்பனைக்கு வெளியிட்டு டெலிவரி வழங்கப்பட உள்ள நிலையில் வழக்கு நிறைவடைய தாமதமாகும் என்பதனால் அதற்கு முன்பாக சந்தையில் BE 6 என்ற பெயரில் கிடைக்க துவங்கும் என கூறப்பட்டுள்ளது.

Share
Published by
Automobile Tamilan Team