நாட்டின் முன்னணி யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளராக விளங்குகின்ற மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி மற்றும் வர்த்தக வாகனங்களின் விலையை அதிகபட்சமாக மூன்று சதவீதம் வரை ஜனவரி 2025 முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களும் விலை உயர்வை அறிவித்து வருகின்ற நிலையில் தற்போது இந்த வரிசையில் மகேந்திராவும் இணைந்துள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற பணவீக்கம் மற்றும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினங்கள் போன்ற காரணங்களால் விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட XEV 9e , BE 6e என இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யூவிகளில், இதில் BE 6e என்ற மாடல் இண்டிகோ நிறுவனத்தின் 6e என்ற பண்ணாட்டு விமான போக்குவரத்து கழகம் வழங்கிய அடையாளத்தை பயன்படுத்தியுள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளது தற்பொழுது இந்த வழக்கானது டெல்லியில் நடைபெற்று வருகின்ற நிலையில் மஹிந்திரா தனது அறிக்கையில் இணக்கமான முடிவினை எடுக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளது.