நாட்டின் முன்னணி யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் பயணிகள் வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் என அனைத்தும் 3% வரை விலை உயர்த்தப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு, மற்ற செலவினங்களை எதிர்கொள்ளுவதற்கு விலை உயர்த்துவது கட்டாயமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த மின்சார எலக்ட்ரிக் கார்களான BE 6, XEV 9e போன்ற மாடல்களும் விலை உயர்த்தப்பட உள்ளது.
குறிப்பாக நாட்டின் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ள நிலையில் மஹிந்திராவும் இணைந்துள்ளது.