மஹிந்திரா கேயூவி100 காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா கேயூவி1OO என்றால் ( Mahindra KUV1OO – kool utility vehicle 1 double oh…) ஆகும். மஹிந்திரா கேயூவி100 காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு என்ஜின் ஆப்ஷனிலும் வருகின்றது
மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி முக்கிய அம்சங்கள்
- புதிய எம் ஃபால்கன் (mFALCON) என்ஜின் சீரிஸ் அறிமுகம்
- 1.2 லிட்டர் பெட்ரோல் mFALCON G80 என்ஜின்
- 1.2 லிட்டர் டீசல் mFALCON D75 என்ஜின்
- ஏபிஎஸ் மற்றும் காற்றுப்பை அனைத்து வேரியண்டிலும் நிரந்தர அம்சம்.
- நாளை முதல் முன்பதிவு தொடங்குகின்றது.
- ஜனவரி 15ந் தேதி விற்பனைக்கு வருகின்றது.
ரூ.500 கோடி முதலீட்டில் இரண்டு புதிய என்ஜின்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கேயூவி100 காரின் இன்டிரியர் டிசைன் கொரிய எல்ஜி நிறுவனத்தின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கார் டிசைன் மற்றும் கட்டுமானம் என அனைத்தும் சென்னை மஹிந்திரா ரிஸர்ச் வேலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரசத்தி பெற்ற எம் ஹாக் என்ஜின் வரிசையை தொடர்ந்து புத்தம் புதிய எம் ஃபால்கான் வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 82 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 1198சிசி எம் ஃபால்கன் ஜி80 பெட்ரோல் என்ஜின் பொருத்தபட்டுள்ளது. இதன் டார்க் 114 என்எம் ஆகும்.
1.2 லிட்டர் என்ஜின் 77 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 1198சிசி எம் ஃபால்கன் டி75 பெட்ரோல் என்ஜின் பொருத்தபட்டுள்ளது. இதன் டார்க் 190 என்எம் ஆகும்.
இரண்டு என்ஜின்களுமே பிஎஸ் IV வகையை சேர்ந்தது . இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். விற்பனைக்கு வரும்பொழுது ஏஎம்டி ஆப்ஷன் எதிர்பார்க்கலாம். மேலும் இரு என்ஜின்களும் மிக குறைவான உராய்வினை கொண்டதாகவும் , சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்க கூடியதாகவும் இருருக்கும்.
மேலும் கேயூவி100 கார் K2 முதல் K8 வரை 4 விதமான வேரியண்டில் வரவுள்ளது. ஆரஞ்ச் , சிவப்பு , சில்வர் , வெள்ளை மற்றும் கிரே என 7 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.