மஹிந்திரா நிறுவனத்தில் கடைசி மைல் வரையிலான கனெக்ட்டிவிட்டி சார்ந்த சேவைக்கு ஜீதோ ஸ்ட்ராங் மினி டிரக் மாடல் டீசல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விற்பனையில் உள்ள ஜீதோ பிளஸ் மாடலின் வெற்றியை தொடர்ந்து கூடுதலாக 100 கிலோ சுமை தாங்கும் திறன் கொண்ட ஸ்ட்ராங் மாடல் வந்துள்ளது.
Mahindra Jeeto Strong
815 கிலோ சுமை தாங்கும் திறன் பெற்ற மஹிந்திரா ஜீதோ ஸ்ட்ராங் டீசல் 670cc எம்-டியூரா என்ஜின் அதிகபட்சமாக பவர் 16 hp மற்றும் 42 Nm டார்க் வழங்குகின்றது. மஹிந்திரா ஜீதோ ஸ்ட்ராங் டீசல் மினி டிரக் மைலேஜ் லிட்டருக்கு 32கிமீ ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
625cc சிஎன்ஜி என்ஜின் அதிகபட்சமாக பவர் 20 hp மற்றும் 44 Nm டார்க் வழங்குகின்றது. மஹிந்திரா ஜீதோ ஸ்ட்ராங் சிஎன்ஜி 750 கிலோ சுமை தாங்கும் திறனுடன் மினி டிரக் மைலேஜ் லிட்டருக்கு 35கிமீ ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
மஹிந்திரா தனது வாடிக்கையாளர்களின் ஓட்டுநர் பாதுகாப்பிற்காக ₹ 10 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டையும் வழங்குகிறது. நீடித்த தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், மஹிந்திரா 3 ஆண்டுகள் அல்லது 72000 கிமீ உத்தரவாதத்தையும் வழங்குகிறது.
Mahindra Jeeto Strong Diesel – ₹ 5.28 லட்சம்
Mahindra Jeeto Strong CNG – ₹ 5.55 லட்சம்
(எக்ஸ்-ஷோரூம் புனே)