இந்தியாவில் கியா நிறுவனத்தின் அடுத்த எஸ்யூவி காருக்கு சிரோஸ் (Syros) என்ற பெயர் சூட்டப்பட்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு ஜனவரி 2025 முதல் எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் மிகு தாராளமான இட வசதியை பெறும் என்பதில் உறுதியாக தெரிவிக்கப்பட்டிருக்கின்ற அதே நேரத்தில் விலையும் சவாலாக துவங்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்நிறுவனம் தற்பொழுது சொனெட் மற்றும் செல்டோஸ் என இரண்டு எஸ்யூவி கார்களுக்கு இடையில் இந்த மாடல் அறிமுகப்படுத்தும் என கூறப்படுவதனால் அநேகமாக விலை ரூபாய் 10 லட்சத்திற்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மாடல் பல்வேறு லைஃப் ஸ்டைல் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகின்ற நிலையில் எஞ்சின் தொடர்பாக எந்த விபரமும் வெளியிடப்படவில்லை மேலும் இந்த மாடல் ICE மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் வெர்சனிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
முழுமையான விவரங்கள் வரும் வாரங்களில் தெரியவரும். மேலும், விலை தொடர்பான அறிவிப்பு 2025 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் வெளியிடப்படலாம். அதனை தொடர்ந்து டெலிவரியும் வழங்கப்படலாம்.