கியா இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கார்களின் விலையை 3 சதவீதம் வரை 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற செல்டோஸ் முதல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சிரோஸ் வரை விலை உயர்த்தப்பட உள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் மூலப்பொருட்கள் மற்றும் உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மாடல்களின் விலை உயர்த்துவதனை தவிரக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும் வேரியண்ட் வாரியாக எவ்வளவு உயர்த்தப்படும் என தற்பொழுது அறிவிக்கப்படவில்லை.
முன்பாக டாடா மோட்டார்சின் வர்த்தக வாகனங்களும், முதன்மையான மாருதி சுசூகி நிறுவனமும் விலை அதிகரிக்க உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, இந்த பட்டியல் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.