Categories: Auto News

இந்தியாவில் கியா கார் விலை 3 % வரை உயருகின்றது

kia sonet

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற கியா நிறுவனத்தின் சோனெட், செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் எம்பிவி ஆகிய மூன்று மாடல்களின் விலை அதிகபட்சமாக 3 % வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1, 2024 முதல் விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ள இந்நிறுவனம் அதிகரித்து வருகின்ற உற்பத்தி மூலப் பொருட்களின் விலை மற்றும் சப்ளை செயின் தொடர்பான கட்டணங்கள் அதிகரித்து வருவதனால் விலையை தவிரக்க முடியவில்லை என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்திய சந்தையில் கியா நிறுவனம் அடுத்த சில மாதங்களில் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் மற்றும் EV9 எலக்ட்ரிக் உட்பட துவக்க நிலை சந்தைக்கு ஏற்ற கிளாவிஸ் எஸ்யூவி இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தை துவக்கியுள்ளது.

கியா இந்தியா நிறுவனம் உள்நாடு மற்றும் ஏற்றுமதி சந்தையில் ஒட்டுமொத்தமாக 11.6 லட்சம் விற்பனை எண்ணிக்கை தற்பொழுது வரை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் செல்டோஸ் எண்ணிக்கை 6,13,000 ஆகவும், சோனெட் எஸ்யூவி 395,000 ஆகவும் மற்றும் கியா கேரன்ஸ் எம்பிவி 159,000 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.

Share
Published by
MR.Durai