உலகின் நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் முன்னணி வகிக்கின்ற ராயல் என்ஃபீல்டு விற்பனை இந்தியாவில் கடும் சரிவினை சந்தித்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய வாகன காப்பீடு கட்டண உயர்வு, உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு, ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பாதுகாப்பு அம்சம் போன்ற காரணங்களால் தொடர்ந்து இரு சக்கர வாகன சந்தை கடும் சவாலினை எதிர்கொண்டு வருகின்றது.
குறிப்பாக என்ஃபீல்டு நிறுவனம் மிகப்பெரிய பாதிப்பினை கண்டுள்ளது.
மாதம் | நடப்பு ஆண்டு | முந்தைய ஆண்டு | வித்தியாசம் (%) |
நவம்பர் 2018 | 65,026 | 67,776 | -4.1 |
டிசம்பர் 2018 | 56,026 | 65,367 | -14.3 |
ஜனவரி 2019 | 70,872 | 76,205 | -7.0 |
பிப்ரவரி 2019 | 60,066 | 71,354 | -15.8 |
மார்ச் 2019 | 58,434 | 74,209 | -21.3 |
ஏப்ரல் 2019 | 62,879 | 76,187 | -17 |
ஆனால் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சந்தை ஏப்ரல் மாத நிலவரப்படி 140 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
மாதம் | நடப்பு ஆண்டு | முந்தைய ஆண்டு | வித்தியாசம் (%) |
நவம்பர் 2018 | 718 | 2,350 | -69.44 |
டிசம்பர் 2018 | 2,252 | 1,601 | 40.66 |
ஜனவரி 2019 | 1,829 | 1,673 | 9.32 |
பிப்ரவரி 2019 | 2,564 | 1,723 | 48.81 |
மார்ச் 2019 | 2,397 | 1,878 | 27.63 |
ஏப்ரல் 2019 | 3,742 | 1,560 | 139.87 |