ரெனால்ட் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ரெனோ க்விட் கார் விற்பனைக்கு எண்ணிக்கை 3 லட்சம் இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த செப்டம்பர் 2015 ஆம் ஆண்டில் ஆல்ட்டோ, இயான், நானோ உட்பட சிறிய ரக கார்களுக்கு சவாலாக க்விட் விற்பனைக்கு வெளியானது.
98 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்ட ரெனோ க்விட் விற்பனைக்கு வெளியிடப்பட்ட நாட்களில் அமோக வரவேற்பினை பெற்று ஆல்ட்டோ காருக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. பிஎஸ்6 என்ஜின் பெற்ற புதிய ரெனோ க்விட் கார் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
ரெனோ க்விட்
ரெனோ-நிசான் கூட்டு நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட்டு அமோக வெற்றி பெற்ற மாடல்களில் ஒன்றாக ரெனோ க்விட் விளங்குகின்றது. இந்நிறுவனம் சமீபத்தில் 5 லட்சம் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்திருந்தது இங்கே குறிப்பிடதக்கதாகும்.
0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இரு விதமான பெட்ரோல் என்ஜின்களில் கிடைக்கின்ற இந்த காரில்
54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் 0.8L கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.
67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.
சமீபத்தில் சில மேம்பாடுகளை பெற்ற இந்த மாடலின் அனைத்து வேரியன்டிலும், ஏபிஎஸ் மற்றும் இபிடி ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த இருக்கை பட்டை நினைவுப்படுத்துதல் உட்பட டாப் வேரியன்டில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியை பெற்றிருக்கின்றது. யூஎஸ்பி சார்ஜர் உடன் கூடிய ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பம் பெற்றதாக வந்துள்ளது.
ரெனோ க்விட் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த கார் அடுத்த சில மாதங்களில் இந்திய சந்தையில் எதிர்பார்க்கலாம். மேலும் க்விட் அடிப்படையிலான பிளாட்பாரத்தில் ட்ரைபர் எம்பிவி காரினை ரெனால்ட் வெளியிட உள்ளது.