வரும் ஜனவரி 2020 முதல் ஹீரோ மோட்டோகார்ப் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் விலையை அதிகபட்சமாக ரூ.2,000 வரை உயர்த்த உள்ளதாக அதிகாரப்ப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்பாக பெரும்பாலான கார் தயாரிப்பாளர்கள் விலை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
விலை உயர்வு என்பது இந்நிறுவனத்தின் புதிய பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான மோட்டார் சைக்கிள், ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் மாடலும் அடங்கும். இதன் பிரீமியம் தயாரிப்புகள் எக்ஸ்பல்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200 போன்ற மாடல்கள் அதிகபட்சமாக ரூ. 2,000 வரை உயருவது உறுதியாகியுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் அடுத்த சில மாதங்களுக்குள் பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்படுவது உறுதியாகியுள்ளது.
புதிய வருடம் விலை உயர்த்தப்படுவதற்கான காரணத்தை இந்நிறுவனம் குறிப்பிடவில்லை. பெரும்பாலும் அதிகரித்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வே முக்கிய காரணமாக இருக்கும் என கருதப்படுகின்றது.