இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹோண்டா CBR 150R மற்றும் CBR 250R பைக்குகள் ஹோண்டாவின் அதிகார்வப்பூர்வ இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா CBR 150R, CBR 250R வருமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
ஹோண்டா CBR 150R
- பி.எஸ் 3 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாக இரண்டு பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
- அதிகார்வப்பூர்வ இணையத்தில் இரு பைக்குகளும் நீக்கப்பட்டுள்ளது.
- புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் இல்லை.
பி.எஸ் 3 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து ஹோண்டா CBR 150R அல்லது ஹோண்டா CBR 250R பைக் வாங்கினால் ஹோண்டா நவி மினி பைக் இலவசம் என விற்பனை செய்த ஹோண்டா தற்பொழுது அதிகார்வப்பூர்வ இணையத்தில் இருந்து இரு மாடல்களை நீக்கிவிட்டது.
சிபிஆர் 250ஆர்ஆர் மற்றும் சிபிஆர் 300ஆர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என முன்பே அறிவித்திருந்த நிலையில் இந்தோனேசியா போன்ற சந்தையில் உள்ள புதிய ஹோண்டா சிபிஆர் 150 ஆர் மற்றும் 250 ஆர் பைக்குகள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா ? அல்லது இவைகளுக்கு மாற்றாக வேறுஎதே திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதா என எந்த உறுதியான அதிகார்வப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்தோனேசியா சிபிஆர் 250ஆர்
அடுத்த சில வாரங்களில் இரு மாடல்களும் புதிய மேம்படுத்தப்பட்ட பி.எஸ் 4 எஞ்சினுடன் விற்பனைக்கு வருமா ? அல்லது வேறு ஏதேனும் மாடல்கள் இந்த பிரிவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து ஹோண்டா வெளியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியா சிபிஆர் 150ஆர்