வருகின்ற ஏப்ரல் 12 ,2017ல் இந்திய சந்தையில் ஃபியட் கிறைஸரின் ஜீப் காம்பாஸ் எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் காம்பாஸ் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜீப் காம்பாஸ் எஸ்யூவி
- ஏப்ரல் 12ந் தேதி இந்தியாவில் ஜீப் காம்பாஸ் மாடல் அதிகார்வப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
- பியட் நிறுவனத்தின் ராஞ்சாகாவுன் ஆலையில் ஜீப் காம்பாஸ் தயாரிக்கப்பட உள்ளது.
- ரூ.19 லட்சத்தில் காம்பாஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை தொடங்கலாம்.
சர்வதேச அளவில் பல நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய காம்பாஸ் மாடலையே அடிப்படையாக கொண்ட இந்த மாடல் இந்திய சந்தையில் ஜீப் பிராண்டின் மதிப்பை பெருமளவில் உயர்த்த வாய்ப்புள்ளது.
இந்திய சந்தைக்கான என்ஜின் விபரங்கள் குறித்து எவ்விதமான அதிகார்வப்பூர்வ தகவலும் வெளியாக நிலையில் இந்த எஸ்யூவி காரில் 170 ஹெச்பி ஆற்றலுடன் 350 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் மல்டிஜெட் டீசல் என்ஜின் மற்றும் 140 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
4×4 டிரைவ் ஆப்ஷனுடன் ஆஃப்ரோடு அம்சங்களை கொண்டதாக வரவுள்ள காம்பஸ் காரின் போட்டியாளர்களாக டூஸான் , சிஆர்-வி உள்பட பிரிமியம் ரக எஸ்யூவி மாடல்களும் சவாலாகவே அமையும்.
ரூ.19 லட்சத்தில் ஜீப் காம்பாஸ் எஸ்யுவி காரின் விலை தொடங்கப்படலாம்.இந்திய சந்தைக்கான மாடல் குறித்து முழுவிபரங்களும் ஏப்ரல் 12ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
ஜீப் காம்பாஸ் படங்கள்
62 படங்கள் இணைப்பு…
[foogallery id=”17019″]
India-spec Jeep Compass SUV debut on April 12 details in Tamil.
மேலும் காம்பாஸ் கார் தொடப்பான செய்திகளை படிக்க ஜீப் காம்பஸ் மற்றும் ஜீப் பிராண்டு பற்றி படிக்க..