ஹூண்டாய் மோட்டார் வெளியிட்டுள்ள தகவலின் படி, விலை உயர்வை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் வழங்கும் வகையில் வெனியூ காருக்கு ரூ.70,000 வரை தள்ளுபடியும் மற்ற மாடல்களுக்கு ரொக்க தள்ளுபடி உட்பட எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஸ்கிராப்பேஜ் போனஸ் கிடைக்கின்றது.
பிரசத்தி பெற்ற பஞ்ச் எஸ்யூவி மாடலை எதிர்கொள்ளுகின்ற எக்ஸ்டருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரு ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள காம்பேக்ட் எஸ்யூவி வெனியூ மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.70,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் நிலையில், இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று விதமான ஆப்ஷனை பெற்றுள்ளது.
ஹூண்டாய் டூஸான் மற்றும் வெர்னா என இரண்டுக்கும் ரூ.50,000 வரை தள்ளுபடி கிடைக்கின்றது. இதுதவிர, ஹூண்டாய் ஐ20 மாடலுக்கு ரூ.65,000, கிராண்ட் ஐ10 நியோஸ் ரூ.68,000 வரையும், மற்றும் ஆரா செடானுக்கு ரூ.48,000 வரை தள்ளுபடி கிடைக்கின்றது.
குறிப்பாக, வழங்கப்பட்டுள்ள எக்ஸ்சேஞ் மற்றும் ஸ்கிராப் தள்ளுபடியும் இணைந்தே வழங்கப்பட்டு டீலர்களை பொறுத்து தள்ளுபடியில் மாற்றம் இருக்கும்.