வாகனவியில் சந்தையில் 5ஜி சேவை மூலம் தானியங்கி வாகனம், பாதுகாப்பு சார்ந்த மாற்றங்கள் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியதாக விளங்கும். 5வது தலைமுறை தொலைத்தொடர்பு அடிப்படையிலான ஹார்டுவேர் சாதனத்தை உருவாக்கிய முதல் நிறுவனமாக ஹுவாவே விளங்குகின்றது.
சமீபத்தில், இந்நிறுவனம் வெளியிட்டிருந்த பலாங் 500 (Balong 5000 5G) சிப்செட் அடிப்படையில் வடிவவமைக்கப்பட்டுள்ள MH5000 ஹார்ட்வேர் உலகின் அதிவேக மற்றும் அதி சிறந்த சேவையை வழங்கும் கார்களுக்கான உலகின் முதல் 5ஜி சார்ந்த அம்சமாக கருத்தப்படுகின்றது.
ஹுவாவே 5ஜி மோட்டார் ஹார்டுவேர்
சமீபத்தில் சீனாவின் ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய MH5000 ஹார்டுவேர் மூலம், எதிர்காலத்தில் அறிவார்ந்த கார் போக்குவரத்து நுட்பத்திற்கு தேவையான தொலைத்தொடர்பு அம்சத்தை உள்ளடக்கிய மிக நவீனத்துவமான சிப்செட் ஆக விளங்கும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
5ஜி ஆதரவை பெற்ற இந்த சிஸ்டம் முதன்முறையாக வர்த்தகரீதியான பயன்பாட்டிற்கு இந்த ஆண்டின் பிற்பாதியில் வெளியிட உள்ளது. இந்நிறுவனம், அறிவார்ந்த முறையில் இயங்கும் கனெக்ட்டிவிட்டி கார்களுக்கான சோதனையை சீனாவின் பல்வேறு நகரங்களில் சோதித்து வருகின்றது.
அமெரிக்காவில் ஹுவாவே நிறுவனத்தின் 5ஜி சார்ந்த தொலைத்தொடர்பு கருவிகளுக்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுத்து வந்தாலும், உலகின் மற்ற டெலிகாம் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்களை விட கூடுதல் வசதிகள் மற்றும் குறைவான விலை போன்ற காரணங்களால் ஹூவாவே நிறுவனம் முன்னிலை வகிக்கின்றது.