வரும் டிசம்பர் 10ந் தேதி ஹோண்டா சிபி ஹார்னட் 160 R பைக் விற்பனைக்கு வரவுள்ளது. ரெவ்ஃபெஸ்ட் விழாவில் பார்வைக்கு வந்த சிபி ஹார்னட் 160R பைக் சிபி யூனிகார்ன் 160 பைக்கிற்க்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ளது.
சிபி யூனிகார்ன் மாடலை அடிப்படையாக கொண்டிருந்தாலும் சிறப்பான டிசைன் தாத்பரியங்களுடன் ஸ்போர்ட்டிவ் தோற்றத்தில் விளங்கும். ஸ்போர்ட்டிவ் தோற்றத்துக்கு முக்கியம் கொடுக்கப்பட்டிருக்கும் சிபி ஹார்னட் 160R பைக்கில் யூனிகார்ன் 160 பைக்கில் உள்ள அதே 162சிசி என்ஜினே பொருத்தப்பட்டிருக்கும்.
சிபி ஹார்னட் 160ஆர் பைக்கின் ஆற்றல் 14.5பிஹெச்பி மற்றும் டார்க் 14.61 என்எம் இருக்கும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
ரூ.5000 செலுத்தி சிபி ஹார்னட் 160R பைக்கிற்க்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ரூ.85,000 விலையில் ஹோண்டா சிபி ஹார்னட் 160R பைக் விற்பனைக்கு வரலாம்.