ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டில் மீண்டும் வீடா V1 Plus விற்பனைக்கு ரூபாய் 1.15 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக இந்த வேரியண்ட் ஆனது நீக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் விற்பனைக்கு வெளியாகி உள்ளது.
இது டாப் வீடா V1 ப்ரோ வேரியன்டை விட ரூபாய் 15000 விலை குறைவாக அமைந்திருக்கின்றது. இரு மாடல்களுக்கும் பொதுவாக பேட்டரி மற்றும் டாப் ஸ்பீடு உள்ளிட்டவைகளில் வித்தியாசம் உள்ளது மேலும் ரேஞ்ச் ஆனது 10 கிலோ மீட்டர் வரை குறைவாக கிடைக்கின்றது.
குறைந்த விலையில் வந்துள்ள வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வி1 பிளஸ் மின்சார ஸ்கூட்டர் மாடல் 3.44kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 85 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது விடா வி1 புரோ வேரியண்ட் 3.94kWh பேட்டரியைப் பெற்றுள்ளது. இதன் ரேஞ்சு 110 கிமீ வரை கிடைக்கும். 7-இன்ச் டச்ஸ்கிரீன் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. வீடா வி1 புரோ ஸ்கூட்டர் மாடலில் பேட்டரி ஸ்வாப் நுட்பத்துடன் ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் என நான்கு விதமான ரைடிங் மோடுகள் உள்ளன.
Vida Escooter | Vida V1 Plus | Vida V1 Pro |
---|---|---|
Price | ₹ 1,15,000 | ₹ 1,45,900 |
Real Range | 100 km | 110 km |
அதிகபட்ச வேகம் | 80km/h | 80km/h |
Acceleration 0-40 km/h | 3.4 seconds | 3.2 seconds |
சார்ஜிங் நேரம் 0-80% | 5மணி 15 நிமிடம் | 5மணி 15 நிமிடம் |
பேட்டரி திறன் | 3.44kWh | 3.94 kWh |
- 2023 ஹீரோ விடா V1 Plus – ₹ 1,15,000
- 2024 ஹீரோ விடா V1 Pro – ₹ 1,45,900
(எக்ஸ்-ஷோரூம் விலை, போர்ட்டபிள் சார்ஜர் மற்றும் FAME-2 மானியம் உட்பட தமிழ்நாடு)
தோற்ற அமைப்பில் இரு மாடல்களும் ல்இடி ஹெட்லேம்ப், அகலமான ஃப்ளைஸ்கிரீன், ஸ்வாப்பிங் பாடி பேனல் மற்றும் இரு பிரிவு பெற்ற இருக்கை வடிவமைப்பை கொண்டுள்ளது.