புதுச்சேரியில் வரும் மே 1ம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவையில் தினமும் பெட்ரோல் விலை மாற உள்ளது.
ஹெல்மெட் கட்டாயம்
- இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் பட்சத்தில் தலை பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகும்.
- டூ வீலர் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமே ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதே ஆகும்.
- ஐஎஸ்ஐ சான்று பெற்ற தலைகவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதால் தலைக்கு ஏற்படும் படுகாயம் 70 சதவீதம் தடுக்கப்படுகின்றது.
- சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி தினமும் பெட்ரோலிய பொருட்கள் விலை மாறுபடும்.
புதுச்சேரியில் விற்பனையாகின்ற வாகனங்களில் 85 சதவிதம் இருசக்கர வாகனங்கள் தான். கடந்த 2016-17 நிதியாண்டில் புதுச்சேரியில் விற்பனையான 66,378 வாகனங்களில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டுமே 57,439 ஆகும்.
கடந்த 2016-17 ஆம் நிதியாண்டில் புதுவையில் நிகழ்ந்த 1755 க்கு மேற்பட்ட விபத்துக்களில் 831 விபத்துக்கள் இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்பட்டுள்ளது. விபத்துகளினால் 219 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 79 இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர்.
தினமும் இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தவறாமல் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான சாலைப் பயணத்தினை மேற்கொள்ளுமாறு புதுச்சேரி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Helmet Dalo!! Road safety should be the highest priority for everyone. Please don’t ride without a helmet. pic.twitter.com/xjgXzjKwQj
— sachin tendulkar (@sachin_rt) April 9, 2017
//platform.twitter.com/widgets.js
தரமான ஹெல்மெட் வாங்க படிக்க – உங்கள் ஹெல்மெட் பாதுகாப்பானதா ?
பைக் ஓட்டி மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் கண்டிப்பாக அணிய வேண்டும் வாகனம் ஓட்டிச் செல்லும் போது மொபைல் போன் பேசக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் மோட்டார் வாகன சட்ட மசோதா 2016ல் இருசக்கர வாகனங்ளில் ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையிலான சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுதவிர, மொபைலில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாயாக அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.
தினமும் மாறும் பெட்ரோலிய பொருட்கள் விலை
இந்தியாவில் முதன்முறையாக புதுச்சேரி உள்பட 5 நகரங்களில் மே 1ந் தேதி முதல் தினமும் சர்வதேச சந்தையில் நிலவுகின்ற கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படடையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் செய்யும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தும்.
இந்த நடைமுறை வரும்பொழுது பெட்ரோல், டீசல் மற்றும் மற்ற பெட்ரோலிய பொருட்கள் விலையில் தினமும் சில பைசாக்கள் வரை குறையவும் அல்லது ஏறும். ஆனால் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. எனவே இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்பில்லை, என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தலைகவசம் அணியுங்கள் உங்கள் தலைமுறையை காத்திடுங்கள்…..