இந்திய பிரிமியம் ரக எஸ்யுவி சந்தையில் மிக சிறப்பான மாடல்களில் ஒன்றான ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி விலை ரூ.2.85 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2.2 4X2 பேஸ் வேரியன்டில் எந்த மாற்றங்களும் இல்லை.
கடந்த வருடத்தில் அதிரடியாக விலை குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது முந்தைய விலையை ஈடுகட்டும் வகையில் மீண்டும் விலை உயர்வை அதனை சமன் செய்யும் வகையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எண்டேவர் எஞ்சின்
என்டெவர் எஸ்யூவி காரில் 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் என் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன் உள்ளது. 160 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 2198 சிசி TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 385என்எம் ஆகும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர் ஆப்ஷனில் உள்ளது.
200 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 3198 சிசி TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 450 என்எம் ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் மட்டுமே உள்ளது.
2.2 லிட்டர் என்ஜினில் 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் உள்ளது. அதுவே 3.2 லிட்டர் என்ஜினில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே உள்ளது.
எண்டேவர் எஸ்யூவி புதிய விலை பட்டியல்
வேரியன்ட் | புதிய விலை | முந்தைய விலை | வித்தியாசம் |
2.2 4X2 AT Trend | ரூ 23.78 லட்சம் | ரூ 23.78 லட்சம் | — |
2.2 4X4 MT Trend | ரூ 26.63 லட்சம் | ரூ 23.78 லட்சம் | ரூ 2.85 லட்சம் |
2.2 4X2 AT Titanium | ரூ 27.93 லட்சம் | ரூ 27.50 லட்சம் | ரூ 43,000 |
3.2 4X4 AT Trend | ரூ 27.68 லட்சம் | ரூ 25.93 லட்சம் | ரூ 1.75 லட்சம் |
3.2 4X4 AT Titanium | ரூ 30.89 லட்சம் | ரூ 29.76 லட்சம் | ரூ 1.13 லட்சம் |
(அனைத்தும் எக்ஸ்ஷோரூம் டெல்லி விலை )