நமது இந்திய ராணுவத்தின் இலகுரக ஸ்டிரைக்கிங் (Light Strike Vehicle) வாகனங்கள் பிரிவில் கூர்கா எஸ்யூவி மாடலை 2,978 எண்ணிக்கையில் வாங்குவதற்கான ஆர்டரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஃபோர்ஸ் மோட்டார்ஸின் வலுவான பொது சேவை வாகனங்கள் மூலம் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை ஆதரிப்பதில் உள்ள நீடித்த உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என இந்நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளது.
கரடு முரடான சாலைகளில் பயணிப்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற கூர்கா எஸ்யூவி மாடலில் மெர்சிடிஸ்-பென்ஸ் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக பவர் 140 hp, மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடல் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இதே எஞ்சினை இரண்டு மாடல்களும் பகிர்ந்து கொள்ளுகின்றது. கூடுதலாக முதன்முறையாக இந்த பிரிவில் shift-on-the-fly 4WD (4H,4L மற்றும் 2H) பெற்றுள்ளது.
233 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றதாக அமைந்துள்ள மாடலில் 16 அங்குல அலாய் வீல் பெற்று 3 டோர் மற்றும் 5 டோர் என இரண்டு விதமாக விற்பனைக்கு கிடைக்கின்றது.