இந்தியாவைச் சேர்ந்த முன்னணி மினி பஸ் மற்றும் வேன் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் திட்டத்தில் களமிறங்கியுள்ளது.
ஃபோர்ஸ் மோட்டார்ஸ்
சிறிய பேருந்துகள் மற்றும் வேன் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஃபோர்ஸ் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான வேன்கள் மற்றும் மினி பஸ்களை தயாரிப்பதற்கு என பிரத்தியேகமான 35 நபர்கள் கொண்ட தொழிற்நுட்ப குழுவை நியமித்துள்ளது.
முதற்கட்ட ஆய்வுகளை தொடங்கியுள்ள ஃபோர்ஸ் மோட்டார் அடுத்த மூன்று ஆண்களுக்குள் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான மாடலாக டிராவலர் மினி பஸ் விளங்கும் என குறிப்பிட்டுள்ளது.
நிதி அயோக் அறிக்கையின் படி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் மின்கலன் உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவுவதுமிக அவசியம் என குறிப்பிட்டுள்ள நிலையில் பேட்டரி உற்பத்தி மற்றும் மின்சார வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் மின்சார சார்ந்த வாகனங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளில் தீவரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.