இந்தியாவில் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனம் தற்பொழுது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகத்தை உறுதி செய்யும் வகையில் மீண்டும் ஒரு டீசரை வெளியிட்டு இருக்கின்றது வருகின்ற நவம்பர் 27 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள ஆக்டிவா எலக்ட்ரிக் மாடல் விற்பனைக்கு வேகமாக 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைக்க துவங்கலாம்.
குறிப்பாக வரவுள்ள மாடல் ஆக்டிவா 110cc இணையான திறனை வெளிப்படுத்தம் என ஏற்கனவே இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளதால் அநேகமாக ரேஞ்ச் 90 முதல் 120 கிலோமீட்டர் வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும், நிலையில் விலையும் சவாலாக ரூபாய் 1,20,000 முதல் தூங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தற்பொழுது வெளியிடப்பட்ட டீசரில் எல்இடி ஹெட்லைட் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகவும் அதே நேரத்தில் மற்றபடி பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக இந்திய சந்தைக்கு ஹோண்டா நிறுவனம் முதற்கட்டமாக இரண்டு ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே உறுதி செய்திருந்த நிலையில் ஒன்று நிலையான பேட்டரி (Fixed Battery) முறையும் மற்றொன்று இலகுவாக பேட்டரியை ஸ்வாப் செய்யும் நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும் எனக் கூறியிருந்தது. எனவே முதலாவதாக வரவுள்ள மாடல் அனேகமாக நிலையான பேட்டரி அமைப்பாக இருக்கலாம்.
போட்டியாளர்களுக்கும் கடும் சவாலினை ஏற்படுத்தும் நிலையில் வர உள்ள இந்த மாடல் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி உள்ளது. விற்பனைக்கு வந்தாலும் உடனடியாக நாடு முழுவதும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிக குறைவு அனேகமாக டீலர்கள் வாயிலாக பல கட்டங்களாகவே ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கலாம் என தெரிகின்றது.
முழுமையான ஹோண்டாவின் ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய பல்வேறு தகவல்கள் நவம்பர் 27ஆம் தேதி வெளியாகும். அதற்கு முன்பாகவே டீசர் வாயிலாக பல தகவல்கள் கிடைக்க பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.