ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

fasttag pass

உள்ளூர் வாசிகள் அடிக்கடி டோல்கேட் வரியை செலுத்துவதில் உள்ள சிரமத்தை குறைக்கும் நோக்கில் ஃபாஸ்ட்டேக் பாஸ் என்ற பெயரில் ரூ.3000 கட்டணமாக செலுத்தி பாஸ் எடுத்துக் கொண்டால் ஆண்டு முழுவதும் அல்லது 200 டிரிப் பயன்படுத்திக் கொள்ள அதாவது எது முதலில் வருகிறதோ அதுவரை அனுமதிக்கப்படும் என  நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பாஸ் வணிக ரீதி அல்லாத (Non Transport Vehicle)  கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கு மட்டுமே பொருத்தும் மற்றபடி, மற்ற வணிக பயண்பாடு வாகனங்களுக்கு பொருந்தாது.

ஆகஸ்ட் 15, 2025  இந்த பாஸ் நடைமுறை நாட்டின் அனைத்து டோல்கேட்டிலும் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தப் பாஸினை பெற ராஜ்மார்க் யாத்ரா ஆப் தவிர NHAI மற்றும் MoRTH வலைத்தளங்களில் கொடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, ஒவ்வொரு டோல் கேட்டிற்கு தனியாக ரூ.3,000 கட்டணம் வசூலிக்கப்படும், நீங்கள் ஆண்டுக்கு 200 டிரிப் அல்லது அதற்கு குறைவாக சில டோல் கேட்டுகளை பயன்படுத்தினால், அவற்றுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதுமானதாகும்.

Exit mobile version