இந்தியாவின் வால்வோ ஐஷர் வர்த்தக வாகன பிரிவின் ஐஷர் டிரக் மற்றும் பஸ் நிறுவனம் புதிதாக வணிகரீதியான பயன்பாட்டிற்கு ஏற்ற ஐஷர் ப்ரோ 1000 மற்றும் ஐஷர் ப்ரோ 3000 என இரண்டு டிரக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
ஐஷர் ப்ரோ 1000 & ப்ரோ 3000 டிரக்குகள்
பெங்களுரில் நவம்பர் 22-23 வரை நடைபெற்று வரும் ஐஷர் ப்ரோ பிஸ் எக்ஸ்போ (Eicher Pro Biz Expo) கண்காட்சியில் இலகு மற்றும் நடுத்தர பிரிவில் (Light and Medium Duty – LMD ) மொத்தம் 5 வகையான டிரக்குகளை ஐஷர் ப்ரோ 1000 மற்றும் ஐஷர் ப்ரோ 3000 என்ற மாடல்களை ரூ.16.26 லட்சம் முதல் ரூ.27.4 லட்சம் விலைக்குள் அறிமுகம் செய்துள்ளது.
இ-காம்ர்ஸ் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ப்ரோ 1000 வரிசையில் ப்ரோ 1110, ப்ரோ 1110XP, ப்ரோ 1110XP மேலும் ப்ரோ 300 வரிசையில் புரோ 3012/3014 மற்றும் 3015 என மொத்தம் 5 வகையான வேரியன்ட்களில் வந்துள்ளது.
அனைத்து 5 வேரியன்ட்களும் 24 அடி நீளம் கொண்ட கார்கோ பாடியுடன் மிக தாராளமான இடவசதி கொண்டதாக அதிகப்படியான எடையுடன் கூடியதாக வந்துள்ள இந்த டிரக்குகள், 4.9T முதல் 16T GVW கொண்டிருப்பதுடன் வந்துள்ளது.
பாரத் ஸ்டேஜ் 4 மாசு உமிழ்வு பெற்ற E494 எஞ்சின் வால்வோ இஎம்எஸ் 3.0 கொண்டதாக இந்த டிரக்குகள் 4 வருட வாரண்டியுடன் வரம்பற்ற கிலோமீட்டர் வழங்குவதுடன் அதிகபட்ச சர்வீஸ் இடைவெளியாக 50,000 கிமீ கொண்டிருக்கின்றது.