வால்வோ ஐஷர் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய 4 நான்-ஸ்டாப் சீரீஸ் ஹெச்டி (Non-Stop Series HD) டிரக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக சிறப்பான பவர் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
ஐஷர் புரோ 6019XPT டிப்பர், ஐஷர் புரோ 6048XP ஹாலேஜ் டிரக், ஐஷர் புரோ 6055XP மற்றும் ஐஷர் புரோ 6055XP 4×2, ட்ரையிலர் டிரக் என நான்கு மாடல்கள் வெளியாகியுள்ளது. இலகுரக, நடுத்தர மற்றும் கனரக வாகனம் என மூன்று பிரிவுகளிலும் வந்துள்ளது.
Eicher Non-Stop Series HD Trucks
வால்வோ ஐஷர் கூட்டணியில் தயாரிக்கப்பட்ட VEDX5 மற்றும் VEDX8 என இருவிதமான என்ஜின்களை பெறுகின்றது.
48 டன் GVW திறன் பெற்று நீண்ட தொலைவு சரக்கு போக்குவரத்துக்கு ஏற்ற ஐஷர் புரோ 6048XP டிரக்கில் அதிகபட்சமாக 1200 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற VEDX8 இன்ஜின் 300 hp பவரை வழங்குகுவதுடன் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும் என குறிப்பிட்டுள்ளது.
ஐஷர் புரோ 6055XP மற்றும் ஐஷர் புரோ 6055/1 (4X2) என இரண்டு டிராக்டர் டிரெய்லர்கள் மாடலில் அதிக மைலேஜ் தருகின்ற VEDX8 இன்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன, இது 300 hp பவர் மற்றும் அதிகபட்சமாக 1200 Nm முடார்க் வழங்குகிறது. உகந்த செயல்திறன், சிறந்த வலுவான மற்றும் டிரைவ்லைனுடன் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
டிப்பர் வகையில் வந்துள்ள ஐஷர் புரோ 6019XPT மாடலில் VEDX5, 5.1L நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 240 hp பவர் மற்றும் 900 Nm டார்க்கையும் வழங்குகிறது.
ஐஷர் HD டிரக்குகளில் 100% கனெக்ட்டிவிட்டி திறனை கொண்டதாக உள்ளது. இது தொழில்துறையின் முதல் நிகழ்நேர மையத்தின் மூலம் ஏஐ மற்றும் இயந்திர கற்றலை மேம்படுத்துவதன் மூலம், சேவை தொலைநிலை மற்றும் முன்கூட்டியே கணித்து பிரச்சனைகளை கண்டறிந்து தீர்வுகளை வழங்குகிறது.
அதிகபட்ச செயல்திறன் மற்றும் குறைந்த வேலையில்லா நேரத்தை உறுதி செய்கிறது. கூடுதலாக, டிரக்குகள் ‘மை ஐஷர்’ உடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன, இது ஃபிளிட் செயல்திறன், இயங்கும் நேரம், எரிபொருள் திறன், செயலற்ற நேரம், ஓட்டுநர் நடத்தை மற்றும் பயிற்சித் தேவைகள் போன்ற காரணிகளைக் கண்காணிப்பதற்கான மதிப்புமிக்க நுண்ணறிவு மூலம் பெறும் மேலாண்மை சேவையாகும்.
425க்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சேவை மையம் உட்பட நாடு முழுவதும் 850 க்கும் மேற்பட்ட டச் பாயிண்ட் மற்றும் உதிரிபாகங்களுக்கான 8,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை மையங்கள் ஐஷர் நெட்வொர்க் மூலம் வாகன இருப்பிடத்திலே சேவையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.