பிப்ரவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு காலாவதியான FC முதல் ஓட்டுநர் உரிமம் வரை ஜூன் 30 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. கோவிட்-19 வைரஸ் பாதிப்புகளால் நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவைகளுக்கு தொடர்ந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வாகனங்களுக்கு FC சான்றிதழ், அனைத்து வகையான அனுமதிகள், ஓட்டுநர் உரிமங்கள், பதிவுகள் என அனைத்தும் நாடு முழுவதும் லாக் டவுன் செயப்பட்டுள்ள காரணமாக செல்லுபடியாகும். பிப்ரவரி 1 க்குப் பிறகு காலாவதியான அல்லது காலாவதியான எந்த ஆவணங்களும் 2020 ஜூன் 30 வரை செல்லுபடியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.