Citroen: வரும் ஏப்ரல் 3-ம் தேதி இந்திய சந்தையில் பிஎஸ்ஏ குழுமத்தின் சிட்ரோயன் பிராண்டின் முதல் கார் வருகை மற்றும் சிட்ரோயன் இந்தியா எதிர்கால திட்டங்கள் என பல்வேறு முக்கிய விபரங்கள் சென்னையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முக்கிய விபரங்களை வெளியிட உள்ளது.
சிகே பிர்லா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தை கைப்பற்றிய பிஎஸ்ஏ குழுமத்தின் முதல் இந்திய மாடலாக சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் எஸ்யூவி அல்லது C3 ஏர்கிராஸ் எஸ்யூவி என இரண்டில் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சிட்ரோயன் கார் அறிமுகம்
பிரான்சு நாட்டைச் சேர்ந்த Groupe PSA நிறுவனத்தின் கீழ் சிட்ரோயன் , DS, பியாஜியோ, வாக்ஸ்ஹால், ஒபெல், மற்றும் இந்தியாவின் பிரபலமான அம்பாசிடர் ஆகிய பிராண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் அம்பாசிடர் பிராண்டில் கார்கள் விற்பனை செயப்படுவதில்லை.
திருவள்ளுவர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிகே பிர்லா குழுமத்தின் தயாரிப்பு ஆலையில் பிஎஸ்ஏ நிறுவனம், கார்களை உற்பத்தி செய்வதற்கும், இந்தியாவில் உற்பத்தி செயப்படுகின்ற கார்களுக்கான டிரான்ஸ்மிஷன் மற்றும் வெளிநாடுகளுக்கு டிரான்ஸ்மிஷன்களை ஏற்றுமதி செய்ய ஓசூரில் சிகே பிர்லா குழுமத்தின் PSA Avtec Powertrain என்ற பெயரில் தயாரிக்கப்பட உள்ளது.
இந்நிறுவன கார்கள் மற்றும் எஸ்யூவிகளின் உதிரிபாகங்கள் 90 -95 சதவீதம் வரை உள்நாட்டில் உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் தொடங்கப்பட உள்ள சிட்ரோயன் காரின் முதல் எஸ்யூவி C5 ஏர்கிராஸ் அல்லது C3 ஏர்கிராஸ் என இரண்டில் ஏதேனும் ஒன்றை முதற்கட்டமாக 2021 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரலாம்.