குளோபல் NCAP மையத்தால் சோதனை செய்யப்பட்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிட்ரோன் eC3 காரில் வயது வந்தோருக்கான பாதுகாப்பில் 0 நட்சத்திர மதிப்பீட்டையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு வெறும் 1 நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட eC3 காரில் மிகவும் அடிப்படையான பாதுகாப்பு வசதிகளாக இரண்டு ஏர்பேக்குகள், சிட் பெல்ட் உள்ளிட்டவை மட்டுமே இடம்பெற்றுள்ளது. எலக்ட்ரானிக் ஸ்ட்பிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட எந்த அம்சங்களும் இல்லை.
Citroen eC3 Global NCAP safety rating
கிராஷ் டெஸ்ட்டில் வயது வந்தோருக்கான பாதுகாப்பில் சிட்ரோன் eC3 காருக்கு பெற வேண்டிய மொத்தம் 34 புள்ளிகளில் 20.86 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. முன்பக்க மோதலின் சோதனையில், ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்துப் பாதுகாப்பு நன்றாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்பு பகுதிக்கு பாதுகாப்பு மிகவும் பலவீனமானதாகவும், ஓட்டுநர் மற்றும் உடன் பயணிகளுக்கு முறையே மோசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டுநரின் கால்களுக்கு பாதுகாப்பு மிக குறைவாக உள்ளது. ஆகவே, ஒட்டுமொத்த 5 நட்சத்திரத்துக்கு 0 நட்சத்திரம் மட்டுமே பெற்றுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பு சோதனையில், eC3 காருக்கு 49 புள்ளிகளில் 10.55 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களுக்கு 1 நடசத்திரம் மட்டுமே பெற்றுள்ளது.
ஸ்டெல்லாநைட்ஸ் அறிக்கை;-
ஸ்டெல்லாநைட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய வாகனங்கள் அனைத்தும் உள்ளூர் சந்தை விதிமுறைகளுக்கும் இணங்குதுக்கு ஏற்ற வகையிலே தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு ஏர்பேக்குகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் உள்ள தயாரிப்புகள் முழுவதும் தரமானதாக உறுதி செய்வதை உறுதிப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளது.