இந்திய சந்தையில் முதல் ஆட்டோமொபைல் நிறுவனமாக சீனாவின் SAIC மோட்டார்கார்ப் நிறுவனத்தின் எம்ஜி மோட்டார் இந்தியா என்ற பெயரில் கார்களை விற்பனை செய்ய எஸ்ஏஐசி திட்டமிட்டுள்ளது.
எம்ஜி மோட்டார்
செவர்லே மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீனாவின் பார்டன்ர் நிறுவனமாக செயல்படுகின்ற SAIC நிறுவனத்தின் அங்கமாக உள்ள இங்கிலாந்தின் MG மோட்டார்ஸ் பெயரில் கார்களை விற்பனை செய்ய எஸ்ஏஐசி திட்டமிட்டுள்ளது. இதற்காக குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஜிஎம் செவர்லே நிறுவனத்தின் ஹலால் தொழிற்சாலையை கையகப்படுத்த உள்ளது. இதற்கான ஒப்புதலை சிசிஐ (Competition Commission of India) அமைப்பு வழங்கியுள்ளது.
தொழிலாளர் பிரச்சனையால் குஜராத் மாநிலத்தில் அமைந்திருந்த செவர்லே ஹலால் ஆலையை கடந்த வருடத்தில் மூடியது. ஊதியம் தொடர்பான பிரச்சனையில் குஜராத் ஆலையை மூடிவிட்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள தனது மற்றொருஆலைக்கு அனைத்து தயாரிப்புகள் மற்றும் சில தொழிலாளர்களையும் மாற்றிவிட்டது. அதனை தொடர்ந்து ஜிஎம் நிறுவனம் அறிவித்திருந்த இந்திய சந்தைக்கான முதலீடு திட்டங்களை அனைத்தும் நிறுத்தி வைப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து தற்பொழுது இந்த ஆலையை வாங்கும் திட்டத்திற்கு சீனா நிறுவனத்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
பொம்மைகள் முதல் தொலைதொடர்பு துறை வரை இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன நிறுவனங்கள் இந்திய ஆட்டோமொபைல் துறையில் பெரிதாக களமிறங்காமலும் சோபிக்காத நிலையிலே இருந்து வருகின்றன. தற்பொழுது வரவுள்ள எம்ஜி மோட்டார்ஸ் பிராண்டில் கார்கள் , எஸ்யூவி மற்றும் இலகுரக டிரக்குகளை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் முதற்கட்டமாக காம்பேக்ட் ரகத்தில் எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. எம்ஜி பிராண்டின் வாயிலாகவே கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. எஸ்ஏஐசி மற்றும் செவர்லே நிறுவனங்களின் கூட்டணியில் உருவான மாடல்களே என்ஜாய் மற்றும் செயில் போன்றவை இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் கியா மோட்டார்ஸ் , பிஎஸ்ஏ பீஜோ போன்ற நிறுவனங்களும் இந்தியாவில் தங்களுடைய மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.