அதிரடியான உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நாட்டில் உள்ள 90 சதவீத பி.எஸ் 3 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹோண்டாவின் CBR 250R மற்றும் CBR 150R பைக் வாங்கினால் ரூ. 25,000 வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனம் தற்பொழுதைய நிலவரப்படி ஸ்கூட்டர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை விலை குறைத்து அதிரடியை கிளப்பியுள்ளது.
ஹோண்டாவின் CBR 250R அல்லது CBR 150R பைக் வாங்கினால் ஹோண்டா நவி மினி பைக் இலவசமாக வழங்கப்படுகின்றதாம்..
டிவிஎஸ் அப்பாச்சி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை விலை சலுகை மற்றும் இலவச வாகன காப்பீடு வழங்கப்படுகின்றது.
பஜாஜ் ஆட்டோ அதிகபட்சமாக ரூ.12,000 வரை சலுகை வழங்குவதுடன் மற்றும் இலவச வாகன காப்பீடு வழங்கப்படுகின்றது.
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் பி.எஸ் 3 வாகனங்கள் இருப்பு இல்லை என்ற தகவலே வெளியாகியுள்ளது. மேலும் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு ரூ.15,000 விலை சலுகையும் , மோஜோ மாடலுக்கு ரூ. 35,000 வரை அதிகபட்சமாக சலுகை வழங்கப்படுகின்றது.
மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் இன்று இரவிலும் வாகன பதிவு செய்யப்பட உள்ளதாம். மேலும் ட்ரையம்ப் பைக்குகளுக்கு ரூ. 3 லட்சம் வரை சலுகை வழங்கினாலும் வாங்குவதற்கு யாருமில்லை என்பதனால் ரூ.10 முதல் 11 கோடி வரையிலான மதிப்பை கொண்ட 100க்கு மேற்பட்ட பைக்குகளை திரும்ப அழைக்கின்றது.
ரூ.1600 கோடி வரை விலை சலுகையினால் இழப்பீடை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.