Tata Punch : மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மைக்ரோ எஸ்யூவி காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நுட்ப விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் பன்ச் காரின் மூலம் டாடாவின் பயணிகள் வாகன சந்தையை மதிப்பு கனிசமாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பிரிவில் உள்ள போட்டியாளர்களை விட கூடுதலான தொழிற்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கின்றது.
டாடா பன்ச் எஸ்யூவி
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பன்ச் எஸ்யூவி 3,840 மிமீ நீளம், 1,800 மிமீ அகலம், 1,635 மிமீ உயரம் மற்றும் 2,450 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. இந்த காரில் 187 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 366 லிட்டர் பூட் கொள்ளளவு கொண்டதாக அமைந்துள்ளது. பன்ச் காரில் 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் மற்றும் ஆல்ட்ரோஸில் உள்ளதை போலவே ALFA பிளாட்ஃபாரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த மைக்ரோ எஸ்யூவி காரிலும் 90 டிகிரி கோணத்தில் கதவுகளை திறக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
விற்பனையில் உள்ள அல்ட்ரோஸ், டிகோர் கார்களில் உள்ள என்ஜினை பன்ச் எஸ்யூவி காரிலும் இடம்பெறுகின்றது. இந்த இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை, 86hp பவர், 113Nm டார்க் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.
6.5 வினாடிகளில் பன்ச் கார் 0-60 கிமீ வேகத்தை எட்டும், 0-100 கிமீ வேகத்தை 16.5 வினாடிகளிலும் எட்டும் என டாடா மோட்டார்ஸ் அறிக்கையில் குறிப்பட்டுள்ளது.
டாடா பன்ச் காரில் டாப் வேரியண்டில் மிதக்கும் வகையிலான 7.0 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7.0 இன்ச் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்களுடன் மிகவும் தாராளமாக இடவசதியை கொண்டிருக்கின்றது. IRA இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், தானியங்கி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், மழை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப். பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை முன் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் பிரேக் ஸ்வே கண்ட்ரோல் (Brake Sway Control), இபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை அடங்கும்.
Pure, Adventure, Accomplished மற்றும் Creative என நான்கு வேரியண்டுகளில் 7 வண்ணங்களை பெற்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பன்ச் எஸ்யூவிக்கான முன்பதிவை அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ள நிலையில் கட்டணமாக ரூ. 21,000 வசூலிக்கப்படுகின்றது.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற மாருதி இக்னிஸ், மஹிந்திரா கேயூவி 100, நிசான் மேக்னைட், ரெனோ கைகெர் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ள பன்ச் காரின் விலை ரூ.5.20 லட்சம் முதல் ரூ.8.50 லட்சத்திற்குள் அமையலாம். வரும் அக்டோபர் 20 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளது.