டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற அல்ட்ராஸ் காரில் டர்போ பெட்ரோல் இன்ஜின் பெற்ற கார் விற்பனைக்கு வெளியாக உள்ளது. வருகின்ற ஜனவரி 13-ஆம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் சந்தையில் மிக சிறப்பான ஒரு பெர்ஃபாமென்ஸ் ரக மாடலாக விளங்கு உள்ளது. முன்பே நெக்ஸான் எஸ்யூவி காரில் இடம்பெற்றிருக்கின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை இந்த காரும் பெற உள்ளது.
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 3-சிலிண்டர் அதிகபட்சமாக 5500 ஆர்.பி.எம்-மில் 108 பிஎஸ் பவர் மற்றும் 1500-5000 ஆர்.பி.எம்-மில் 140 என்எம். இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் முதற்கட்டமாக 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிசிடி ஆட்டோ வேரியண்ட் சற்று கால தாமதமாக விற்பனைக்கு கிடைக்கலாம்.
டாடாவின் அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் விலை ரூ.7.99 லட்சம் முதல் துவங்கி ரூ.8.75 லட்சம் வரை நான்கு விதமான வேரியண்டில் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் கிடைக்கின்ற ஃபோக்ஸ்வாகன் போலோ மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ என இரண்டையும் எதிர்கொள்ள உள்ளது.