டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான அல்ட்ராஸ் அடிப்படையில் வடிவமைக்கப்பட உள்ள அல்ட்ராஸ் இவி எலெக்ட்ரிக் கார் 2021 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.
முன்பாக 2019 ஜெனிவா ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டதை விட தற்போது உற்பத்தி நிலை மாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஜிப்ட்ரான் விபரத்தின் படி குறைந்தபட்ச ரேஞ்ச் 250 கிமீ – 300 கிமீ என தொடங்குவதுடன் மிக வேகமாக சார்ஜிங் செய்வதற்கான விரைவு சார்ஜிங் வசதி ஆப்ஷன் உட்பட லித்தியம் ஐயன் செல் கொண்ட பேட்டரியை பாதுகாக்க லிக்யூடு கூல்டு வசதியுடன், ஐடியல் வெப்பத்தை பராமரிக்கும் நோக்கில் வழங்கப்படும்.
உயர் ரக ஸ்டீல் பேக்கில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பேட்டரிக்கு IP67 சான்றிதழ் பெற்றிருக்கும். எனவே, தூசு மற்றும் நீரினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. டாடாவின் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 8 ஆண்டு வாரண்டி அல்லது 1.60 லட்சம் கிமீ வழங்கப்பட உள்ளது.
டாடாவின் மின்சார கார்கள் அனைத்தும் கனெக்டிவ் டெக்னாலாஜியை அடிப்படையாகவே பெற்றிருக்கும் என்பதனால், பல்வேறு நவீன டெக் வசதிகள், வாகனத்தின் நிலை, இருப்பிடம் உள்ளிட்டவற்றை இலகுவாக அறிய இயலும் வகையில் வசதிகள் கொண்டிருக்கும்.