ரெனோ இந்தியா நிறவனம் ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்திய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அனேகமாக ட்ரைபர் எம்பிவி மற்றும் HBC காம்பேக்ட் எஸ்யூவி காரிலும் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. ஆனால் ரெனோ இந்தியா ஏஎம்டி மாடலை மட்டுமே கண்காட்சியில் வெளியிட்டது.
28,000க்கு அதிமான எண்ணிக்கையில் ட்ரைபர் எம்பிவி காரை விற்பனை செய்துள்ள இந்நிறுவனம், தற்போது 1.0 லிட்டர் என்ஜினை பொருத்தி மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக பிஎஸ்6 என்ஜினில் வழங்கி வருகின்றது.
ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டுள்ள 1.0 லிட்டர் TCe டர்போ பெட்ரோல் என்ஜினை ரெனால்ட்-நிசான் தயாரித்து வருகின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 100 hp பவருடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக காட்சிப்படுத்தியுள்ளது. இந்த என்ஜினை ரெனால்ட் ட்ரைபர், வரவுள்ள ஹெச்பிசி எஸ்யூவி மற்றும் நிசான் இந்தியா மாடல்களும் பெற உள்ளது.
ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட ரெனோ ட்ரைபர் ஏஎம்டி அடுத்த சில மாதங்களுக்கு பிறகு விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், சற்று தாமதமாக டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட ட்ரைபர் வெளியாகலாம்.