இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெனோ ட்ரைபர் எம்பிவி கார் ரூபாய் 4 லட்சத்து 95 ஆயிரத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காரில் மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகள் கொண்டதாக வந்துள்ளது.
1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு விவிடி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரு விதமாக கிடைக்க உள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் பிறகு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
ரெனோ ட்ரைபரின் மைலேஜ் லிட்டருக்கு 20.5 கிமீ வழங்கும் என ஆராய் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.
ட்ரைபர் RXE [ரூ. 4.95 லட்சம்]
இரட்டை முன் ஏர்பேக்குகள்
இபிடி உடன் கூடிய ஏபிஎஸ்
ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள்
புரொஜெக்டர் ஹெட்லைட்கள்
பாடி கலர் பம்பர்
வீல் சென்டர் கேப்
டூயல் டோன் டாஷ்போர்டு
டிஜிட்டல் கிளஸ்ட்டர்
மேனுவல் ஏசி
முன்புற பவர் விண்டோஸ்
4 இருக்கை ஆப்ஷன்
12 வோல்ட் சார்ஜி சாக்கெட்
ட்ரைபர் RXL [ரூ. 5.49 லட்சம்]
க்ரோம் பூச்சை பெற்ற முன்புற கிரில்
14 அங்குல ஸ்டீல் வீலுக்கு வீல் கவர்கள்
கருப்பு நிறத்தை பெற்ற சி மற்றும் பி பில்லர்
அட்ஜெஸ்டபிள் ஸ்டீயரிங்
மேனுவல் அட்ஜெஸ்ட் விங் மிரர்
மூன்று வரிசைகளுக்கும் ஏசி வென்ட்கள்
ரிமோட் சென்டரல் லாக்கிங்
ப்ளூடூத் மற்றும் யூஎஸ்பி உடன் 2-டின் ஆடியோ சிஸ்டம்
2 ஸ்பீக்கர்கள்
குளிர்விக்கும் வசதியுடன் சென்டர் கன்சோல்
ட்ரைபர் RXT [ரூ. 5.99 லட்சம்]
ரூஃப் ரெயில்கள் (50 கிலோ வரை சுமக்கும் திறன்)
ஸ்கிட் பிளேட் முன் மற்றும் பின்புறத்தில்
பவர் அட்ஜெஸ்டபிள் ORVM
பவர் விண்டோஸ்
ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதியுடன் 8.0 அங்குல தொடுதிரை
நான்கு ஸ்பீக்கர்கள்
இரண்டாவது வரிசைக்கு 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட்
குளிர்விக்கும் வசதியுடன் க்ளோவ் பாக்ஸ்
ட்ரைபர் RxZ [ரூ. 6.49 லட்சம்]
நான்கு ஏர்பேக்குகள்
ரிவர்ஸ் கேமரா
14 அங்குல அலாய் வீல்கள்
எல்இடி ரன்னிங் விளக்குகள்
கீலெஸ் என்ட்ரி
ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பொத்தான்
2 ட்வீட்டர்கள்
ரியர் டிஃபோகர் மற்றும் வைப்பர்
மூன்றாவது வரிசைக்கு 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட்