ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள 6 இருக்கை கொண்ட மாருதி சுசுகி எர்டிகா அடிப்படையிலான XL6 என பெயரிடப்பட்டுள்ளது. மாருதியின் நெக்ஸா ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.
எர்டிகா காரின் அடிப்படையிலான மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள இந்த கிராஸ்ஓவர் ரக மாடலுக்கு மாருதி எக்ஸ்எல்6 என உறுதி செய்யப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட், ஸ்டைலிஷான க்ராஸ்ஓவருக்கு இணையான பம்பர் உள்ளிட்டவை பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது.
மூன்று வரிசை இருக்கை பெற உள்ள இந்த காரில் இரண்டு கேப்டன் இருக்கைகளை இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சாதாரன எர்டிகா காரை விட மிகவும் ஸ்டைலிஷான மற்றும் முரட்டு தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்க உள்ள மாருதி சுசுகி XL6 காரில் மிக நேர்த்தியான புராஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், பாடி கிளாடிங் உள்ளிட்ட வசதிகளுடன் வரவுள்ளது.
இன்டிரியரில் பல்வேறு புதிய வசதிகளை பெற்றிருக்கும். குறிப்பாக கருப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட டேஸ்போர்டில் மாருதி ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருப்பதுடன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளை கொண்டதாக அமைந்திருக்கும்.
மாருதியின் XL6 காரில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது. கூடுதலாக ஹைபிரிட் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது.
image source -gaadiwaadi