2021 ஜனவரி மாதம் முதல் மாருதி சுசூகி நிறுவனம், தனது அனைத்து கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களின் விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் மாடல் வாரியாக உயர்த்தப்படும் விலையை அறிவிக்கவில்லை.
பொதுவாக உயர்ந்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கணிசமாக விலையை உயர்த்துவது வழக்கமான நடைமுறை ஆகும். அது போலதான் மாருதி நிறுவனம் தன்னுடைய வாகனங்களின் விலை உயர்த்த உள்ளதாக பிஎஸ்இ (Bombay Stock Exchange – BSE) மூலம் குறிப்பிட்டுள்ளது.
மாடல் மற்றும் வேரியண்ட் வாரியாக உயர்த்தப்படும் விலையை பிறகு அறிவிக்க உள்ளது. மாருதி மடுமல்லாமல் பெரும்பாலான மோட்டார் நிறுவனங்கள் அடுத்தடுத்து விலை உயர்வை அறிவிக்க தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.