கியா வெளியிட உள்ள புதிய சோனெட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு துவங்கப்பட முதல் நாளில் மட்டும் நாடு முழுவதும் 6523 முன்பதிவுகளை பெற்றுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 4 மீட்டருக்க குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்த உள்ளது.
இந்தியாவில் கியா கடந்த வருடம் வெளியிட்ட செல்டோஸ் மாடலும், பிரீமியம் எம்பிவி கார்னிவல் அமோகமான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது மாடலாக வரவுள்ள சோனெட் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது. ரூ.25,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு ஆன்லைன் அல்லது டீலர்கள் மூலம் முன்பதிவு நடைபெற்று வருகின்றது.
ஜிடி லைன் மற்றும் டெக் லைன் என இரு விதமான வேரியண்டுகளை பெற்றுள்ள சோனெட்டில் மூன்று விதமான என்ஜின் வழங்கப்பட உள்ளது. என்ஜின் பவர் மற்றும் டார்க் அட்டவனையில் பின் வருமாறு :-
1.0-litre turbo-petrol | 1.2-litre petrol | 1.5-litre diesel | |
பவர் | 120PS | 83PS | 100PS/ 115PS |
டார்க் | 172Nm | 115Nm | 240Nm/ 250Nm |
கியர்பாக்ஸ் | 6-speed iMT/ 7-speed DCT | 5-speed MT | 6-speed MT/ 6-speed AT |
மேலும் வாசிக்க – டெக் லைன் Vs ஜிடி லைன் வித்தியாசாங்கள் ? கியா சோனெட்