இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற கார்களில் 2020 ஆம் ஆண்டின் சிறந்த கார் தேர்வின் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூரி சுற்றில் உள்ள கார்களை பற்றி அறிந்து கொள்ளலாம். பிரீமியம் பிரிவு என்ற பெயரிலும் சிறந்த கார் தேர்வு செய்யப்படுகின்றது.
நடுவர் மன்றத்தில் ஆட்டோ டுடே இதழில் யோகேந்திர பிரதாப் மற்றும் ராகுல் கோஷ், ஆட்டோஎக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த துருவ் பெல் மற்றும் இஷான் ராகவா, கார் இந்தியாவைச் சேர்ந்த ஆஸ்பி பதேனா மற்றும் சர்மத் காத்ரி, ஈவோ-வைச் சேர்ந்த சிரிஷ் சந்திரன் மற்றும் அனிருத்த ரங்நேகர், மோட்டாரிங் வோர்ல்டிலிருந்து கார்த்திக் வேர் மற்றும் பாப்லோ சாட்டர்ஜி, ஓவர் டிரைவைச் சேர்ந்த பெர்ட்ராண்ட் மற்றும் ரோஹித் பரட்கர், இந்து பத்திரிக்கையின் சேர்ந்த முரலிதர். எஸ், பயணீர் குஷன் மித்ரா, கார்வேலைச் சேர்ந்த விக்ராந்த் சிங் போன்றோர்கள் இடம்பெற்றுள்ளனர்.
2020 ஆம் ஆண்டின் சிறந்த கார் தேர்வுக்கான சுற்றில் இடம்பெற்றுள்ள மாடல்களின் பட்டியல் பின்வருமாறு;- ஹோண்டா சிவிக், ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ், ஹூண்டாய் வென்யூ, கியா செல்டோஸ், மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ, மாருதி வேகன் ஆர், மஹிந்திரா எக்ஸ்யூவி300, எம்ஜி ஹெக்டர், நிசான் கிக்ஸ், ரெனால்ட் ட்ரைபர் மற்றும் டாடா ஹாரியர் ஆகியவை அடங்கும்.
2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த பிரீமியம் கார் தேர்வுக்கான சுற்றில் இடம்பெற்றுள்ள மாடல்களின் பட்டியல் பின்வருமாறு;- ஆடி ஏ6, மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்5, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்4, எக்ஸ்7, இசட்எக்ஸ்4, ஜீப் ரேங்கலர், மெர்சிடிஸ் சிஎல்எஸ், மற்றும் போர்ஷே 911 கரேரா எஸ் போன்றவை ஆகும்.
வாக்களிப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை இப்போது இங்கே காணலாம். ஒவ்வொரு ஜூரி உறுப்பினருக்கும் மொத்தமாக 25 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ஜூரி உறுப்பினர் ஒரு காருக்கு அதிகபட்சமாக 10 புள்ளிகள் மட்டும் கொடுக்க இயலும். ஆனால், அதே ஜூரி உறுப்பினர் குறைந்தது ஐந்து கார்களுக்கு புள்ளிகளை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும், அவர் வழங்குகின்ற இரண்டு கார்களுக்கு ஒரே மாதிரியான புள்ளிகளை வழங்க முடியாது. எனவே, ஒவ்வொரு ஜூரி பத்திரிக்கையாளரும் சிறப்பான முறையில் சிறந்த காரை தேர்வு செய்கிறார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சிறந்த கார் மாடலாக மாருதி சுசுகி ஸ்விஃப்ட் தேர்வு செய்யப்பட்டது. 2020 ஆம் ஆண்டிற்கான மாடல் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.