Car News இந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனை தேதி அறிவிப்பு Last updated: 23,May 2019 12:38 pm IST MR.Durai Share Hyundai Kona Electricவரும் ஜூலை 9-ஆம் தேதி இந்தியாவில் ஹூண்டாய் கோனா (Hyundai Kona)எஸ்யூவி காரை விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முழுமையான சார்ஜில் 350 கிமீ பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்குகின்றது.ரூ.7000 கோடி முதலீட்டை சென்னையில் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பிற்காக ஹூண்டாய் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் பாகங்களை தருவித்து இந்தியாவில் ஒருங்கிணைத்து கோனா மாடலை விற்பனை செய்ய ஹூண்டாய் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.ஹூண்டாய் கோனா சிறப்புகள்இந்தியாவில் ஹூண்டாய் அறிமுகம் செய்ய உள்ள முதல் எலக்ட்ரிக் காராக விளங்க உள்ள கோனா எஸ்யூவி விலை ரூபாய் 25 லட்சத்தில் தொடங்க வாய்ப்புகள் உள்ளது. சர்வதேச அளவில் 39 kW மற்றும் 69 kW என இரு விதமான பேட்டரி பேக்குகளை கொண்டதாக விற்பனை செய்யப்படுகின்றது.39 கிலோவாட் கொண்ட பேட்டரி பெற்ற கோனா காரின் சிங்கிள் சார்ஜ் மைலேஜ் அதிகபட்சமாக 312 கிமீ பயணிக்க உதவுவதுடன் 133bhp பவரை வெளிப்படுத்துவதுடன் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.3 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39.2kWh பேட்டரி கொண்ட மாடலின் முழுமையான சார்ஜ் செய்ய 6 மணி நேரம் போதுமானதாகும்.அடுத்தப்படியாக, 39 கிலோவாட் கொண்ட பேட்டரி பெற்ற கோனா காரின் சிங்கிள் சார்ஜ் மைலேஜ் அதிகபட்சமாக 482 கிமீ பயணிக்க இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 201bhp பவரை வெளிப்படுத்துவதுடன் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.6 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.இந்தியாவில் முதற்கட்டமாக குறைந்த விலை 39 கிலோவாட் கொண்ட பேட்டரியுடன் கூடிய மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம். கூடுதலாக 100kW DC ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படும் இதன் காரணமாக 80 சதவீத சார்ஜிங் பெற 54 நிமிடங்கள் போதுமானதாகும்.இந்திய சந்தையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஜூலை 9, 2019-ல் வெளியிடப்பட உள்ளது. இந்த காரின் விலை ரூ.25 லட்சத்தில் தொடங்க வாய்ப்புகள் உள்ளது. TAGGED:Hyundai ElectricHyundai Kona Share This Article Facebook Previous Article புதிய கியா எஸ்பி எஸ்யூவி இன்டிரியர் படங்கள் வெளியானது Next Article க்ரூஸர் ஸ்டைல் சுசுகி இன்ட்ரூடர் 250 விற்பனைக்கு வெளியாகிறதா.?