ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் முந்தைய எக்ஸ்சென்ட் காரின் மேம்பட்ட புதிய ஆரா செடான் ரூ.5.79 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிசையர், டிகோர் உட்பட ஆஸ்பயர் போன்ற செடான் ரக மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.
கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் தோற்ற உந்துதலில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஆரா செடான் கார் 3,995 மிமீ நீளத்தை பெற்று முன்புறத்தில் மிக நேர்த்தியான தேன்கூடு அமைப்பிலான கிரில் மற்றும் பானெட் வடிவமைப்பு கவர்ச்சிகரமாக அமைந்திருப்பதுடன் புராஜெக்டர் ஹெட்லைட், எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகளை பெற்றுள்ளது.
சிவப்பு,சில்வர்,வெள்ளை, கிரே, நீளம் மற்றும் பிரவுன் என மொத்தமாக 6 விதமான நிறங்கள் ஆவ்ரா பெறுகின்றது.
இந்த காரின் இன்டிரியரை பொறுத்தவரை, 5 நபர்கள் பயணிக்கும் வகையிலான மிக தாராளமான இருக்கை வசதி மற்றும் இடவசதி வழங்க 2405 மிமீ வீல்பேஸ், அதிகப்படியான பொருட்களை பூட்டில் வைக்க 402 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பெஸ் பெற்றுள்ளது. மிக ஸ்டைலிஷான டேஸ்போர்டின் டிசைனில் 8.2 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் ப்ளே , ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வதிகளுடன் கூடிய ஐப்ளூ ஆடியோ ஸ்மார்ட் ஆப் வசதியுடன், வயர்லெஸ் சார்ஜர், ரியர் வியூ மானிட்டர், ரிவர்ஸ் கேமரா போன்றவற்றை பெற்றிருக்கின்றது.
ஆரா காரின் என்ஜின் விபரம்
83 ஹெச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் உற்பத்தி செய்கின்ற1.2 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் சிஎன்ஜி வகையில் வரும்போது 72 ஹெச்பி பவர் மற்றும் 101 என்எம் டார்க் உற்பத்தி செய்யவல்லதாகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஸ்மார்ட் ஆட்டோ ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட உள்ளது. சிஎன்ஜி மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கிடைக்கும்.
1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் ஆவ்ரா மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் லிட்டருக்கு 20.50 கிமீ மைலேஜ், ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற மாடல் லிட்டருக்கு 20.10 கிமீ மைலேஜ் வழங்கும். அதுவே சிஎன்ஜி மாடல் கிலோவிற்கு 28.40 கிமீ மைலேஜ் வழங்கும்.
75 ஹெச்பி பவர் மற்றும் 190 என்எம் டார்க் உற்பத்தி செய்கின்ற 1.2 டீசல் ஈக்கோ டார்க் என்ஜின் பொரத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட உள்ளது.
1.2 லிட்டர் ஈக்கோடார்க் என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் லிட்டருக்கு 25.35 கிமீ மைலேஜ், ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற மாடல் லிட்டருக்கு 25.40 கிமீ மைலேஜ் வழங்கும்.
பிஎஸ்-6 ஆதரவை பெற்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் முன்பாக ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரா செடானில் பொருத்தப்பட்டுள்ளது. 100 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் இந்த என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் லிட்டருக்கு 20.5 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.2 லிட்டர் ஈக்கோடார்க் என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் லிட்டருக்கு 25.35 கிமீ மைலேஜ், ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற மாடல் லிட்டருக்கு 25.40 கிமீ மைலேஜ் வழங்கும்.
இந்த காருக்கு மூன்று வருடம் அல்லது 1,00,000 கிமீ வரை வாரண்டி வழங்கப்படுகின்றது. இதுதவிர 4 வருடம் அல்லது 50,000 கிமீ இறுதியாக 5 வருடம் அல்லது 40,000 கிமீ என வாரண்டி ஆப்ஷன் வழங்கப்படுகின்றது.
போட்டியாளர்கள்
4 மீட்டருக்கு குறைந்த நீளம் கொண்ட சந்தையில் முதன்மையாக மாருதி டிசையர் விளங்குகின்றது. டிசையர் உட்பட ஹோண்டா அமேஸ், டாடா டிகோர், ஏமியோ மற்றும் ஃபோர்டு ஆஸ்பயர் போன்ற செடான்களுக்கு போட்டியாக விளங்கும்.
ஹூண்டாய் ஆரா கார் விலை பட்டியல்
இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஹூண்டாய் ஆரா காரின் அறிமுக ஆரம்ப விலை ரூ.5,79,900 முதல் டாப் வேரியண்ட் ரூ.9,22,700 ஆகும்.