பிஎஸ்6 என்ஜினை பெற்ற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வெளியிடப்பட்டு ரூ.8.04 லட்சம் ஆரம்ப விலையில் துவங்குகின்றது. முந்தைய 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின் நீக்கப்பட்டுள்ளது.
4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற எஸ்யூவி கார்களில் பிரசத்தி பெற்ற ஈக்கோஸ்போர்ட் காருக்கு இன்றைக்கு வென்யூ உட்பட நெக்ஸான், எக்ஸ்யூவி 300, விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்கள் கடுமையான சவாலினை ஏற்படுத்தி வருகின்றது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்6 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் 122 ஹெச்பி மற்றும் 149 என்எம் டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜின் 5-வேக மேனுவல் அல்லது 6-வேக டார்க் கன்வெர்ட்டர் தானியங்கி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பிஎஸ் 6 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட ஈக்கோஸ்போர்ட்டில் 100 ஹெச்பி பவர் மற்றும் 215 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. புதுப்பிக்கப்பட்ட பிஎஸ்6 என்ஜின் பெற்ற இந்த மாடலில் மொத்த பெட்ரோல் (7 வேரியண்ட்) மற்றும் டீசல் என 13 வேரியண்ட்களில் கிடைக்கின்றது. பிஎஸ் 6 ஈக்கோஸ்போர்ட் காருக்கு மூன்று ஆண்டு / 1,00,000 கிமீ உத்தரவாதத்துடன் வெளியிடப்படுவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ஈக்கோஸ்போர்டின் டாப் வேரியண்டில் முக்கிய அம்சங்களாக ஆறு ஏர்பேக்குகள், ஃபோர்டு Sync 3 சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது 9.0 இன்ச் மல்டிமீடியா சிஸ்டத்துடன் 8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் கிடைக்கும். டாப் மாடலில் பகல்நேர ரன்னிங் விளக்குகள், மழை உணர்ந்து செயல்படும் வைப்பர் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் போன்ற HID ஹெட்லேம்ப் போன்ற அம்சங்களும் கிடைக்கின்றன.
பிஎஸ்6 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விலை பட்டியல்
ரூ.8.04 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.11.58 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
ஈக்கோஸ்போர்ட் 1.5 Petrol | BS6 | BS4 | வித்தியாசம் |
---|---|---|---|
Ambiente MT | 8,04,000 | 7,91,000 | 13,000 |
Trend MT | 8,84,000 | 8,71,000 | 13,000 |
Titanium MT | 9,63,000 | 9,50,000 | 13,000 |
Titanium MT Thunder | 10,53,000 | 10,40,000 | 13,000 |
Titanium+ MT | 10,53,000 | 10,40,000 | 13,000 |
Titanium+ MT Sports | 11,08,000 | NA | NA |
Titanium+ AT | 11,43,000 | 11,30,000 | 13,000 |
ஈக்கோஸ்போர்ட் 1.5 Diesel | BS6 | BS4 | வித்தியாசம் |
Ambiente MT | 8,54,000 | 8,41,000 | 13,000 |
Trend MT | 9,34,000 | 9,21,000 | 13,000 |
Titanium MT | 9,99,900 | 9,99,900 | 0 |
Titanium MT Thunder | 11,03,000 | 10,90,000 | 13,000 |
Titanium+ MT | 11,03,000 | 10,90,000 | 13,000 |
Titanium+ MT Sports | 11,58,000 | 11,45,000 | 13,00 |