மேம்பட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்ளுடன் முரட்டு தன்மையுடன் கூடிய ஸ்டைலிஷான இசுசூ டி மேக்ஸ் பிக்கப் டிரக் தாய்லாந்தில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய டி-மேக்ஸ் வி கிராஸ் விற்பனைக்கு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளது.
இரண்டு கதவுகள் மற்றும் நான்கு கதவுகள் என இரு விதமான மாறுபாட்டில் வந்துள்ள டி-மேக்ஸ் பிக்கப்பில் 1.9 லிட்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என இருவிதமான ஆப்ஷன்கள் தாய்லாந்தில் கிடைக்கின்றது. அதிகபட்சமாக 190 ஹெச்பி பவர் மற்றும் 450 என்எம் டார்க் வழங்கும் 3.0 லிட்டர் என்ஜின் உள்ளது. இந்திய சந்தையில் வி கிராஸ் பிக்கப் மாடல் 150 ஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் வழங்கும் 1.9 லிட்டர் டீசல் என்ஜின் கிடைக்கும். பொதுவாக 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ஆல் வீல் டிரைவ் மற்றும் ரியர் வீல் டிரைவ் தேர்வுகளில் கிடைக்கும்.
அனைத்து புதிய டி-மேக்ஸ் டிரக் மாடல் இசுசூ டைனமிக் டிரைவ் பிளாட்பாரத்தை பெற்றுள்ளது. ஓட்டுநர் நிலைப்பு தன்மை மற்றும் குறைக்கப்பட்ட சத்தம் மற்றும் அதிர்வு நிலைகளை மேம்படுத்துவதற்காக லேடர் ஃபிரேம் அடிச்சட்டம் முக்கியமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து முரட்டு தன்மையான தோற்றத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள புதுப்பிக்கப்பட்ட வி-கிராஸ் இரு-எல்இடி புரொஜெக்டர்கள் ஹெட்லைட்கள், எல்இடி டெயில் லைட்டுகள், ஒருங்கிணைந்த பின்புற பம்பர், டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் மூடுபனி விளக்குகள் ஆகியவற்றை பெற்று முன் பம்பரில் புதுவிதமான ஸ்டைலிங் கோடுகளை பெறுகிறது. புதிய ரேடியேட்டர் கிரில் வடிவத்துடன், புதிய 18 அங்குல அலாய் வீல்கள் பெற்றுள்ளது.
புதிய டி-மேக்ஸின் கேபின் முற்றிலும் மேம்பட்டு புதிய டாஷ்போர்டின் மையத்தில் 9.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்ப்பட்டு நேவிகேஷன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றுடன் வந்துள்ளது.
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் தாய்லாந்தில் கொண்டு வரப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப எதிர்கால நுட்பங்கள், ஆட்டோமேட்டிக், பகிரதல் மற்றும் மின்மயமாக்கப்பட்ட (CASE) தொழில்நுட்பங்களுக்கும் தயாரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதிகளில் பிளைன்ட் ஸ்பாட் எச்சரிக்கை, ஆறு ஏர்பேக்குகள், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வாகனத்தில் இருந்து வெளியேறி கொஞ்ச தொலைவு சென்றால் தானியங்கி பூட்டுதல், ஃபாலோ மீ விளக்குகள் மற்றும் குரல் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.