மஹிந்திரா அறிமுகம் செய்துள்ள புதிய தார் எஸ்யூவி காரின் #1 மாடலை பிரத்தியேகமாக ஏலம் விடப்பட்ட நிலையில் இதற்கான தொகை ரூ.1.11 கோடியாக நிறைவடைந்துள்ளது. இந்த தொகைக்கு டெல்லியை சேர்ந்த ஆகாஷ் மின்டா ஏலம் எடுத்துள்ளார்.
வென்ற ஏலத் தொகையின் ஒரு பகுதியை மஹிந்திராவின் தார் #1 மாடலுக்கு மின்டா செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை கோவிட்-19 நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள நாண்டி அறக்கட்டளை, ஸ்வேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பி.எம் கேர்ஸ் நிதி என இந்த மூன்று அமைப்புகளில் ஒன்றிற்கு நன்கொடை அளிக்கப்பட உள்ளது. அதன் விவரங்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏலத்தில் 5400 நபர்கள் பங்கேற்ற நிலையில், ரூ.25 லட்சம் முதல் துவங்கிய ஏலம் ஒவ்வொரு நபர்களும் குறைந்தபட்சம் ரூ.25,000 வரை கூடுதலாக உயர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. முதல் நாளில் 80 லட்சத்தை தொட்ட ஏல தொகை, இறுதி நாளான நேற்று ரூ.1.11 கோடியில் நிறைவடைந்துள்ளது.
தார் எஸ்யூவி காரில் பெட்ரோல் என்ஜின் இணைக்கப்பட்டுள்ளதால் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை பெட்ரோல் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. 2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.
2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பெறும் தார் காரில் அதிகபட்சமாக 130 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.
மேலும் அனைத்து வேரியண்டிலும் மேனுவல் ஷிஃப்ட் 4×4 டிரான்ஸ்ஃபர் கேஸ் வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா தார் எஸ்யூவி விலை எவ்வளவு ?
இரண்டாம் தலைமுறை மஹிந்திரா எஸ்யூவி விலை ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்குள் அமையலாம்.
web title: Mahindra Thar #1 auctioned winning bid Rs.1.11 crore – car news in Tamil