பெட்ரோல் மாடலை விட ரூ.60,000 கூடுதல் விலையில் வந்துள்ள மாருதி ஆல்ட்டோ சிஎன்ஜி மாடலின் விலை ரூ. 4.11 லட்சத்தில் தொடங்குகின்றது. ஆல்ட்டோ சிஎன்ஜி காரை தொடர்ந்த மாருதி நிறுவனம் பிஎஸ் 6 ரக என்ஜினை கொண்ட ஸ்விஃபட், வேகன் ஆர் மாடல்களை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ஆல்ட்டோ மேம்படுத்தப்பட்ட மாடலில் சிஎன்ஜி வெளியாகமல் இருந்த நிலையில் தற்போது விற்பனக்கு வெளியாகியுள்ளது. LXi மற்றும் LXi (O) என இரு நடுத்தர வேரியண்டுகளை மையமாக கொண்டு வந்துள்ளது.
மாருதி ஆல்ட்டோ சிஎன்ஜி
ஆல்ட்டோ கார் 800சிசி மற்றும் ஆல்டோ கே10 என்ற பெயரில் 1 லிட்டர் எஞ்சின் என இரு பெட்ரோல் தேர்வுகளுடன் சிஎன்ஜி ஆப்ஷனில் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தற்போது மூன்று சிலிண்டரை பெற்ற ஆல்ட்டோ சிஎன்ஜி மாடல் அதிகபட்சமாக 41hp பவர் மற்றும் 60Nm டார்க் வழங்கவல்லதாகும். LXi வேரியண்டில் பவர் ஸ்டீயரிங், ஏசி, முன்புறத்தில் பவர் விண்டோஸ் போன்றவற்றை கொண்டதாகவும், LXi (O) மாடலில் ஏர்பேக் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கும்.
மாருதி ஆல்ட்டோ சிஎன்ஜி ஆரம்ப விலை ரூ. 4.11 லட்சம் முதல் ரூ. 4.14 லட்சம் வரை விற்பனைக்கு (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) கிடைக்கும்.